Connect with us

நண்பன் விஜய்யே கிளம்புன பிறகு எனக்கு என்ன வேலை!.. சினிமாவை விட்டு விலகும் நடிகர் அஜித்!.. வெளியாகும் பகீர் தகவல்!..

ajith1

News

நண்பன் விஜய்யே கிளம்புன பிறகு எனக்கு என்ன வேலை!.. சினிமாவை விட்டு விலகும் நடிகர் அஜித்!.. வெளியாகும் பகீர் தகவல்!..

Social Media Bar

Thala Ajith : தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பதே ஒரு கேள்வி குறியாக ஆகி உள்ளது. ஏனெனில் நடிகர் விஜய் மிகத் தீவிரமாக அரசியலில் இறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை தொடங்கிய உடனே 2026 தேர்தலுக்குள் சினிமாவை விட்டு விலகி விடப் போவதாக விஜய் கூறியிருக்கிறார்.

ajith
ajith

அதற்குள் அவரை வைத்து கொண்டு இரண்டு திரைப்படங்களாவது எடுத்து விட வேண்டும் என்று இயக்குனர்கள் நினைத்து வருகின்றனர். விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் இடத்தை பிடித்திருக்கிறார் என்றாலும் கூட தற்சமயம் அதை விட்டுவிட்டு செல்வதற்கு தயாராக இருக்கிறார்.

மனம் மாறிய அஜித்:

இந்த நிலையில் நடிகர் அஜித்தும் சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்திற்கு சினிமாவில் நடிப்பதில் பெரிதாக ஆர்வமில்லாமல் தான் இருந்தது.

ஏனெனில் சினிமாவிற்கு வந்த காலம் முதலே அஜித்திற்கு இருசக்கர வாகனத்தில் உலகை சுற்றிவர வேண்டும் என்பதுதான் பெரும் ஆசையாக இருந்தது. துணிவு படத்தின் படபிடிப்பு முடிந்த உடனேயே ஒரு சின்ன சுற்றுலா கிளம்பினார் அஜித். அந்த சுற்றுலாவுக்கே அவரது உடல் பெரிதாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிக வயதாகிவிட்டால் தன்னால் உலகையே சுற்றிவர முடியாது என்பதை புரிந்து கொண்ட அஜித் தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்துடன் திரைத்துறையை விட்டு கிளம்புவதற்கு முடிவு செய்து இருக்கிறாராம்.

திரைத்துறையை விட்டு சென்ற பிறகு தனக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் செய்வதற்காக அஜித் விரும்புகிறார் எனவே அவரும் சினிமாவை விட்டு விலக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இப்படி விஜய் அஜித் இருவரும் சினிமாவில் இருந்து விலகி விட்டால் அவர்களது இடத்தை சினிமாவில் யார் பிடிப்பார்கள் என்கிற கேள்விகள் தற்சமயம் எழுந்துள்ளன. அதே சமயம் சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா மாதிரியான நடிகர்கள் கடுமையாக உழைக்கும் பட்சத்தில் அந்த இடத்தை அவர்கள் நிரப்ப முடியும் என்றும் பேசப்படுகிறது.

To Top