விபத்துக்குள்ளான அஜித்தின் கார்!.. விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபரீதம்!..

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார். பொதுவாக நடிகர்களுக்கு நிறைய விளம்பரம் செய்தால்தான் ஓரளவாவது ரசிகர்கள் கிடைப்பார்கள்.

ஆனால் அஜித்திற்கு மட்டும் ரசிக பட்டாளங்கள் எப்போதுமே அதிகமாக இருந்து வருகிறது. இத்தனைக்கும் அவர் ரசிகர்களுடன் பெரிதாக சந்திப்பு கூட நடத்தியதில்லை. அஜித்திற்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கான முக்கிய காரணமே அவர் செய்யும் சாகசங்கள்தான்.

அஜித்திற்கு சாகசங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் ஏற்கனவே பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் அஜித். பலமுறை அந்த சமயங்களில் விபத்துக்கும் உள்ளாகி இருக்கிறார். அதே போல படப்பிடிப்பிலும் அதிக முறை விபத்துக்குள்ளாகி இருக்கிறார்.

ajith2
ajith2
Social Media Bar

அப்படியான சம்பவம் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் நடந்துள்ளது. இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது.

அதில் கார் ஓட்டும் காட்சி ஒன்றை டூப் எதுவும் போடாமல் நிஜமாகவே செய்திருக்கிறார் அஜித். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. அஜித்திற்கு பெரிய படுகாயங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இருந்தாலும் அந்த ஒரு காட்சிக்காக உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார் அஜித். என்னதான் விழாக்களுக்கு எல்லாம் வராமல் இருந்தாலும் கூட ரசிகர்களை திருப்திப்படுத்த இப்படி உயிரை பணயம் வைத்து நடிக்கிறாரே அஜித் என்கின்றனர் நெட்டிசன்கள்.

ஆனால் அஜித் ரசிகர்களை பொறுத்தவரை இதுக்குறித்து அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வளவு வயதான பிறகு தல இவ்வளவு ரிஸ்க் எடுப்பது அவசியம்தானா என்பதே அவர்களது வருத்தமாக இருக்கிறது.