அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்.. இதுதான் காரணமாம்.!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகதான் இருந்து வந்துள்ளது. திரைப்படங்களில் கொடுக்கும் வெற்றியை தாண்டி அஜித்தின் நிஜ வாழ்க்கை குறித்து பல நல்ல விஷயங்கள் எப்போதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது.
அதுதான் அஜித்துக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. நடிகர் அஜித் சினிமாவில் மட்டுமில்லாமல் கார் ரேஸ் போன்ற பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அதனாலேயே பலரும் நிஜ வாழ்க்கையிலேயே அஜித்தை ஒரு கதாநாயகனாகதான் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பத்ம விபூஷன் விருதை பெற்றார் அஜித். அதை தனது மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் சமர்பித்தார். இந்த நிலையில் திடீரென இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அஜித்.
இது ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் 6 மாதங்களுக்கு ஒருமுறை உடல்நிலையை பரிசோதித்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் அஜித். அதற்காகதான் அவர் மருத்துவமனை சென்றுள்ளார் என கூறப்படுகிறது.
ஆனால் கார் ரேஸில் ஏற்பட்ட விபத்தினால் அவருக்கு உடல் பிரச்சனை ஏற்பட்டிருக்குமோ என இதுக்குறித்து ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.