Tamil Cinema News
நாயை பத்தி வேணும்னா சொல்றேன்.. அஜித்தை பத்தி எல்லாம் சொல்ல முடியாது.. அஜித் தம்பியின் உண்மை முகம்.!
நடிகர் அஜித்குமார் தொடர்ந்து தமிழ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து வரும் நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் சினிமாவை விடவும் அஜித் தொடர்ந்து தனது கனவான கார் ரேஸின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அடுத்து அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
அஜித்தின் தம்பியான அனில் குமார் பற்றி பலருக்கும் தெரியாது. அனில் குமாருக்கு இந்த பிரபலமாவதன் மீது எல்லாம் பெரிதாக ஈர்ப்பு கிடையாது. எனவே அவர் தொடர்ந்து பேட்டிகள் போன்ற எந்த ஒரு விஷயத்திலும் பங்கெடுப்பது கிடையாது.
அதே சமயம் அவர் விலங்குகள் மீது பிரியம் கொண்டவர். சமீபத்தில் நாய்களுக்கு ஆதரவாக அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் பேசிய அனில் குமார். நாய்கள் நம்மீது அளவற்ற அன்பை செலுத்துகின்றன. என் வீட்டிற்கு ஒரு நாய் திடீரென வந்தது.
அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடலாம் என ஒருவாரம் பார்த்தேன். ஆனால் யாரும் வரவில்லை. இப்போது அதை நான் வளர்த்து வருகிறேன். நாய்களை நாம் தத்தெடுப்பதில்லை. அவைகள்தான் நம்மை தத்தெடுக்கின்றன.
நாய்களுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு என்பது 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது. எனவே தெரு நாய்களை பார்த்தால் கல்லை கொண்டு அடிக்காதீர்கள். அதனால் பயமடையும் நாய்கள் இன்னமும் மோசமாக நடந்துக்கொள்ளும்.
ஒவ்வொருவரும் அவர்களது வீட்டில் ஒரு நாயையாவது வளர்க்க முடியும். மனிதர்கள் அதிகமாக இருந்ததால் பூமியில் பெரும்பான்மையான வாழ்விடங்களை நாம் எடுத்துக்கொண்டோம். அதிலிருந்து விலங்குகளுக்கு கொஞ்சம் கொடுக்கலாம் என அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரிடம் பேசிய பத்திரிக்கையாளர்கள் அஜித் குறித்து கேள்வி கேட்டனர். உடனே அனில் குமார் நாய்களை பற்றி மட்டும் கேள்விகளை கேளுங்கள்.
