ஒரே ஷாட்ல பேசணும்..! –  நடிப்பில் இயக்குனர் ஹரியை ஆச்சரியப்பட வைத்த அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே இருந்து வருகிற நடிகராவார். இவர் அன்புடன், கண்ணால் பேசவா, பாண்டவர் பூமி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். 

மலை மலை, மாஞ்சா வேலும் போன்ற திரைப்படங்கள் அருண் விஜய்க்கு ஆக்‌ஷன் ஹீரோ படங்களாக அமைந்தன. அதன் பிறகு அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் அருண் விஜய் நடித்து வருகிற ஜூன் 17 அன்று வெளிவர இருக்கும் திரைப்படம் யானை.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரே ஷாட்டில் சண்டையிடுவது போன்ற காட்சிகள் உள்ளன. அந்த காட்சிக்கு பிறகு 15 நிமிடம் பேசும் காட்சியும் உள்ளதாம். இது எல்லாமே ஒரே ஷாட்டில் அமைய வேண்டும்.

அதை சாதரணமாக நடித்தாராம் அருண் விஜய். இதை  கண்டு இயக்குனர் ஹரியே வியப்படைந்தாராம்.

Refresh