Connect with us

உன் கூட படம் பண்ணாலே ட்ராப் ஆகுது!.. வில்லன் நடிகரால் வாய்ப்பை இழந்த கௌதம் மேனன்!..

gautham menon daniel balaji

Cinema History

உன் கூட படம் பண்ணாலே ட்ராப் ஆகுது!.. வில்லன் நடிகரால் வாய்ப்பை இழந்த கௌதம் மேனன்!..

Social Media Bar

Gowtham menon Daniel balaji : வில்லனாக நடிக்கும் நடிகர்களை பொருத்தவரை சில நடிகர்களை பார்த்தாலே நமக்கு பயமாக இருக்கும். உதாரணமாக பழைய சினிமாக்களில் ஆனந்தராஜ், பொன்னம்பலம் போன்ற நடிகர்களை திரையில் பார்க்கும் பொழுதே பலருக்கும் பயமாக இருக்கும்.

அதற்கு முன்பு எடுத்துக் கொண்டால் நம்பியார், அசோகன் போன்றவர்கள் பெரும் வில்லன்களாக இருந்திருக்கின்றனர். இப்படி முதல் படத்திலேயே பார்ப்பவரை பயமுறுத்தும் ஒரு வில்லனாக இருந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி.

முக்கியமான திரைப்படம்:

டேனியல் பாலாஜிக்கு வேட்டையாடு விளையாடு திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படம் ஆகும். அதற்கு முன்பு நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட ஒரு முக்கியமான வில்லனாக அவர் நடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு.

அந்த திரைப்படத்தில் அவரை பார்க்கவே பயமாக இருக்கும் என்கிற ரீதியில் அவரது நடிப்பு இருந்தது. கௌதம் மேனன் இயக்கிய திரைப்படங்களிலேயே மிகவும் கொடூரமான வில்லனை கொண்ட திரைப்படம் வேட்டையாடு விளையாடு என்று கூறலாம்.

ஆனால் வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு பிறகு கௌதம் மேனன் டேனியல் பாலாஜியை வைத்து ஒரு திரைப்படம் கூட இயக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு டேனியல் பாலாஜி வடசென்னை பொல்லாதவன் என்று நிறைய வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் நடித்திருந்தார்.

கிடைக்காமல் போன வாய்ப்புகள்:

ஆனால் ஏன் அவர் கௌதம் என்னும் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து அவர் கூறும் பொழுது வேட்டையாடு விளையாடு திரைப்படம் முடித்த உடனே அடுத்த திரைப்படத்திலும் நான்தான் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டார் கௌதம் மேனன்.

daniel-bajaji
daniel-bajaji

அதனை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளும் தொடங்கின ஆனால் அந்த படம் துவக்கத்திலேயே நின்றுவிட்டது. அதேபோல இன்னொரு திரைப்படத்திலும் என்னை வில்லனாக நடிக்க வைத்திருந்தார் அந்த திரைப்படமும் நின்று விட்டது.

இதனை தொடர்ந்து என்னுடைய நண்பன் ஒருவன் என்னிடம் பேசும்போது நீ நடிக்கவிருக்கும் திரைப்படங்கள் எல்லாம் கௌதம் மேனனுக்கு நின்று விடுகிறது. எனவே அவரது திரைப்படங்களில் நடிக்காதே என்று கூறினார் எனவே நானும் அதன் பிறகு கௌதம் மேனனே நடிக்க கூப்பிட்டாலும் நடிக்க வரவில்லை என்று கூறிவிட்டேன் என்று கூறி இருக்கிறார் டேனியல் பாலாஜி.

To Top