Tamil Cinema News
“அவர் இப்போ சாதாரண விஜய் இல்ல, ஃபோனை வைச்சிடு” – அவமானத்தால் நொந்துப்போன முன்னணி ஹீரோ, அப்படி என்ன நடந்தது தெரியுமா?
கோலிவுட்டின் டாப் ஸ்டாராக உலா வரும் விஜய், தான் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக சமீபத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார். இது ஒரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக இருந்தாலும் மறுபக்கம் அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு வருத்தத்தையே அளித்துள்ளது.
விஜய் தனது கட்சிப் பெயரை அறிவித்ததிலிருந்தே சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் விஜய்யை குறித்த விவாதங்களே வலம் வருகின்றன. சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி அரசியல் விமர்சகர்களும் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து பற்பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒருபுறம் “விஜய் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்” என அவரது அரசியல் வருகையை ஆதரித்துப் பேசுபவர்களும் இருக்க, மறுபுறமோ “விஜய்க்கு இது தேவை இல்லாத வேலை, அவர் ஒரு நல்ல நடிகர், நடிகராகவே இருந்துவிட்டுப் போகட்டும்” என்ற விமர்சனங்களும் வருகின்றன. எனினும் விஜய்யின் அரசியல் நுழைவு பல விவாதங்களை கிளப்பியுள்ளது தெரிய வருகிறது.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகரான திவாகரன் கிருஷ்ணா, தனது பேட்டி ஒன்றில் விஜய்யை குறித்த ஒரு நிகழ்வை பகிர்ந்துள்ளார். அவர் விஜய்யை குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் ஹீரோவாக நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “ஷாஜகான்”. இத்திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர்தான் திவாகரன் கிருஷ்ணா. இத்திரைப்படம் 90’ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாகும்.
திவாகரன் கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் விஜய்யை தொடர்புகொள்ள பல முறை முயன்றேன். ஒரு முறை நான் தொடர்புகொண்டபோது அவரது மேலாளர் ஃபோனை எடுத்தார். ‘சார், நான் விஜய் சார் கூட பேசணும், ஷாஜகான் படத்துல அவர் கூட செகண்ட் ஹீரோவா நடிச்சேன்’ என கூறினேன்.
அதற்கு அவர், ‘விஜய் சார் இப்போ ஷாஜகான் விஜய் சார் கிடையாது. இப்போ பீஸ்ட் விஜய் சார்’ என பதிலளித்தார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், அவருடன் பேசுவதற்கும் அவருடன் உட்காருவதற்குமான டைம் முடிந்துவிட்டது. இதுதான் வாழ்க்கை” என்று மிகவும் வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார். விஜய் அரசியல் கட்சித் தொடங்கியுள்ள நிலையில் திவாகரன் கிருஷ்ணாவின் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்