Connect with us

இந்த மாதிரி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்!.. தமிழ் சினிமாவை ஊர போட்டு அடித்த குட் நைட் மணிகண்டன்!.

actor manikandan

News

இந்த மாதிரி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்!.. தமிழ் சினிமாவை ஊர போட்டு அடித்த குட் நைட் மணிகண்டன்!.

Social Media Bar

Good Night Manikandan : தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஜெய் பீம் மணிகண்டன். திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த மணிகண்டனுக்கு அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

குட் நைட் திரைப்படம் தற்சமயம் அவரின் ஒரு பெரும் அடையாளமாக மாறி இருக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்தும் சில படங்களில் நடித்து வருகிறார் மேலும் சில படங்களை அவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு இயக்குனராவதுதான் மணிகண்டனின் ஆசை என்றும் கூறப்படுகிறது 

தமிழ் சினிமாவில் தவறு என்று தெரியாமல் செய்த நிறைய தவறுகள் திரைப்படங்களில் உண்டு. அடுத்து வரும் தலைமுறைகள் முந்தைய தலைமுறை போல் இல்லாமல் இந்த தவறுகளை கண்டுபிடித்து தனது திரைப்படங்களில் இருந்து அவற்றை நீக்கி வருகின்றனர் என்றே கூறலாம்.

அப்படியான நடிகர்களில் குட் நைட் மணிகண்டனும் முக்கியமானவர். குட் நைட் மணிகண்டனிடம் இடையில் ஒரு பேட்டியில் எப்படிப்பட்ட திரைப்படங்களில் நீங்கள் நடிக்க மாட்டீர்கள் என்று ஒரு கேள்வியை கேட்ட பொழுது அதற்கு அவர் பதில் அளித்த மணிகண்டன் பெண்களை இழிவாக காட்சிப்படுத்தும் திரைப்படங்கள் மூன்றாம் பாலினத்தை மோசமாக காட்டும் திரைப்படங்கள் அல்லது அவர்களை நகைச்சுவைக்காக இழிவுபடுத்தும் திரைப்படங்கள், சாதி மத ரீதியாக உயர்த்தி பேசும் திரைப்படங்கள் போன்றவற்றில் நடிக்க மாட்டேன்.

மாற்று திறனாளிகள் மற்றும் தனிநபரின் நிறம் உடல் குறித்த நகைச்சுவை இருக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் மொத்தத்தில் கூற வேண்டும் என்றால் பிற்போக்கு தனமான திரைப்படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் மணிகண்டன்

 ஒரு காலத்தில் கவுண்டமணி காமெடி என்றாலே அது  தனிநபரின் நிறத்தை உடலை கேலி செய்யும் விதத்தில்தான் இருக்கும். ஆனால் முந்தைய தலைமுறை அதை தவறு என்று தெரியாமல் அதை ரசித்து வந்தனர் இப்பொழுதும் அந்த மாதிரியான நகைச்சுவைகளை ஆதரிக்கும் மக்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்றாலும் அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக மாறி இருக்கிறது என்று நெட்டிசன்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிலர் கூறும் பொழுது 90% திரைப்படங்கள் மணிகண்டன் சொல்வது போன்ற தவறான விஷயங்களை வைத்து தான் வெளிவந்திருக்கின்றன. அதில் இருந்து மணிகண்டன் மாற்றத்தை கொண்டு வர நினைக்கிறார் என்று அவரை பாராட்டியும் இருக்கின்றனர்.

To Top