Cinema History
நம்ம பசங்க அவங்க!.. நம்மதான் உதவி பண்ணனும்!.. மாணவர்களுக்காக இறங்கி வந்த ஜெய்சங்கர்!..
Actor Jaishankar : சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டம் முதலே பல ஊழியர்களுக்கு உதவிகளை செய்து வந்தவர் நடிகர் ஜெய்சங்கர். அப்போதைய சினிமா காலகட்டங்களில் நாடகங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களை தான் சினிமாவில் நடிப்பதற்கு தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் சினிமா வளர துவங்கிய பிறகு நாடகம் என்பதே இல்லாமல் போனது. இதனை அடுத்து அடுத்த தலைமுறைகளில் எப்படி நடிகர்களை தேர்ந்தெடுப்பது என்கிற கேள்விக்கு வந்த பொழுது தான் வெளிநாடுகளில் இதற்காக நடிப்பதற்கு பயிற்றுவிக்கும் இடங்கள் இருக்கின்றன என தெரிந்தது.
இதனை தொடர்ந்து இந்தியாவிலும் நிறைய இடங்களில் பிலிம் இன்ஸ்டியூட் துவங்கப்பட்டது. அங்கு படித்தவர்களுக்கு அதற்கு பிறகு ஓரளவு சினிமாவில் முன்னுரிமை கிடைத்தது. நடிகர் ரஜினிகாந்த் கூட அப்படி படித்து சினிமாவிற்கு வந்தவர்தான். இந்த நிலையில் தமிழில் புகழ்பெற்ற இயக்குனரான ஆபாவாணன் மற்றும் அரவிந்த்ராஜ் இருவரும் பெரிய இன்ஸ்டிட்யூட்டில் படித்துவிட்டு தான் ஊமை விழிகள் திரைப்படத்தை இயக்கினர்.
ஜெய்சங்கர் கொடுத்த வாய்ப்பு:
ஊமை விழிகள் திரைப்படத்தை முதலில் குறும்படமாகத்தான் அவர் எடுத்து வைத்திருந்தார். அதை பெரிய படமாக எடுக்க பல்வேறு இடங்களில் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது விஜயகாந்த் ஆரம்ப இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருகிறார் என்பதை அறிந்து அந்த படத்தை அவருக்கு போட்டு காட்டினார்.
அவரும் அந்த படம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருந்தார் இந்த நிலையில் ஆபாவணனுக்கு நடிகர் ஜெய்சங்கருடன் பழக்கம் இருந்ததால் ஜெய்சங்கரிடம் அந்த படத்தை கொடுத்து இதை பாருங்கள் சார் இதில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் உரிமையாளர் கதாபாத்திரம் இருக்கிறது.
அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது ஜெய்சங்கரும் ஸ்ரீவித்யாவும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தனர். எனவே ஸ்ரீவித்யாவை அழைத்த ஜெய்சங்கர் ஒரு பத்து நிமிடம் ஒதுக்க முடியுமா நமக்கு தெரிந்த பசங்க ஒரு படம் கொண்டு வராங்க என்று கூறி அந்த குறும்படத்தை அவருக்கும் போட்டு காட்டி இருந்தார்.
பிறகு இதில் அந்த பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நான் நடிக்க போகிறேன் எனக்கு மனைவியாக நீ நடிக்க போகிறாய் என்று ஸ்ரீவித்யாவிடம் கூறியிருக்கிறார் ஜெய்சங்கர். கால் ஷீட் எல்லாம் மாற்ற வேண்டி இருக்குமே என்று கேட்டிருக்கிறார் ஸ்ரீவித்யா. இந்த மாணவர்கள் இப்போது தான் சினிமாவிற்கு வருகிறார்கள். இவர்களுக்கு நாம் தான் உதவி செய்ய வேண்டும் என்று கூறி அவர்களுக்கு உடனே சம்மதம் கூறி இருக்கிறார் ஜெய்சங்கர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்