News
எனக்கு கொரோனா வந்துவிட்டது! – அதிர்ச்சி தகவல் அளித்த ஜெயம்ரவி
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்று நடித்தவர் ஜெயம் ரவி. முதல் பாகத்தில் அவருக்கு குறைவான அளவில் காட்சிகள் இருந்தாலும், இரண்டாம் பாகத்தில் அவரே முக்கியமான நாயகராக இருப்பார்.

தற்சமயம் நடிகர் ஜெயம் ரவி தனக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனை சென்று கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் தனக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருடன் பழகியவர்களையும் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளுமாறு வழியுறுத்தியுள்ளார்.

கொரோனா முடிந்துவிட்டது. இனி பிரச்சனையில்லை என மக்கள் பலரும் நம்பி வந்த நிலையில் இன்னும் கொரோனா ஓயவில்லை என நினைவூட்டும் விதமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது.
