Connect with us

உயிர் ரசிகருக்கு இறுதி மரியாதை செலுத்திய ஜெயம் ரவி!..

jayam ravi fan

News

உயிர் ரசிகருக்கு இறுதி மரியாதை செலுத்திய ஜெயம் ரவி!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே முன்னணி நடிகராக இருந்து வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜெயம் ரவி தொடர்ந்து சம்திங் சம்திங், எம்.குமரன், சந்தோஷ் சுப்ரமணியம் என வெற்றி படங்களாக கொடுத்து கொண்டிருந்தார்.

இறுதியாக அடங்க மறு திரைப்படம் அவருக்கு சிறப்பான வெற்றி படமாக அமைந்தது. அதற்கு பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன் தற்சமயம் வந்த சைரன் வரை எதுவுமே அவ்வளவாக வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் ஜெயம் ரவியின் எம்.ஜி.ஆர் நகர் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் ராஜா.

jayam-ravi1

கடந்த சில தினங்களாகவே உடல் நிலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜா சமீபத்தில் காலமானார். இந்த விஷயத்தை அறிந்த ஜெயம் ரவி நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜாவின் புகைப்படம் முன்னால் நின்று வணங்கி அவருக்கும் மரியாதை செலுத்தியுள்ளார். அவரது குடும்பத்திற்கு எந்த விதமான உதவி தேவைப்பட்டாலும் செய்து தருவதாக கூறியுள்ளார் ஜெயம் ரவி.

To Top