தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜீவா. தெனாவட்டு கச்சேரி ஆரம்பம் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் நடித்த பொழுது ஜீவாவின் மார்க்கெட் என்பது மிக அதிகமாகவே இருந்து வந்தது.
ஆனால் இப்பொழுது ஜீவாவிற்கு மார்க்கெட் என்பது பெரிதாக இல்லை. ஜீவா நடித்த திரைப்படங்களில் அவருக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த திரைப்படங்களில் கோ திரைப்படத்திற்கு முக்கியமான பங்கு உண்டு.
இந்தத் திரைப்படத்தை இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் குறித்து நடந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் ஜீவா. கோ திரைப்படத்தில் ஆரம்பத்தில் சிம்பு தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது.
ஜீவா பகிர்ந்த விஷயம்:
இந்த நிலையில் ஒருநாள் கே.வி ஆனந்த் எனக்கு போன் செய்து ஒரு திரைப்படம் குறித்து பேச வேண்டும் என்று கூறினார். நானும் சரி என்று அவரை சந்தித்தேன்.
அப்பொழுது திரைப்படத்தின் பாடல்கள் கதை அம்சம் என்று பலவற்றையும் அவர் என்னிடம் கூறினார். அதில் நான் நடிக்க போகும் காட்சிகளையும் கூறினார்.
அதையெல்லாம் நான் கேட்டுவிட்டு ஹீரோ தொடர்பான காட்சிகளை எல்லாம் எனக்கே வைத்து விட்டீர்கள் அப்படி என்றால் சிம்பு என்ன செய்வார் என்று கேட்டேன். ஏனெனில் ஆரம்பத்தில் நான் சென்ற பொழுது என்னை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கதான் கே.வி ஆனந்த் அழைக்கிறார் என்று நினைத்தேன்.
ஆனால் அவர் என்னை கதாநாயகனாக நடிக்க அழைத்தார் என்பதே பிறகு தான் தெரிந்தது. சில கால்ஷீட் பிரச்சனைகளால் சிம்பு அந்த படத்தில் இருந்து விலகி இருந்தார் என்று அந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார் ஜீவா.










