Tamil Cinema News
அந்த மாதிரி நடிக்கிறதுக்கு நான்தான் ஆளா? கடுப்பான கார்த்தி பட நடிகர்..!
சில நடிகர்களுக்கு ஏதாவது ஒரு சில திரைப்படங்களே அதிக வரவேற்பை உருவாக்கி தந்துவிடும். அப்படியாக வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் கலையரசன்.
கலையரசனை பொறுத்தவரை மெட்ராஸ் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மெட்ராஸ் படத்தில் அன்பு என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இந்த கதாபாத்திரம் படத்தின் முக்கிய கதாபாத்திரமாகும்.
சொல்ல போனால் படத்தின் இரண்டாவது கதாநாயகன் என கலையரசனை கூறலாம். அதற்கு பிறகு பலருமே அவரை மெட்ராஸ் அன்பு என்றுதான் கூறி வந்தனர்.
ஆனால் பெரும்பாலான திரைப்படங்களில் கலையரசனுக்கு இறப்பது மாதிரியான கதாபாத்திரமே கொடுக்கப்படுகிறது. இது அவருக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதுக்குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் கலையரசன். அதில் அவர் கூறும்போது எனக்கு ஒரு கேரக்டர் எழுதும்போதே அது சாக வேண்டும் என்றுதான் எழுதுவார்கள் போல.
இனிமேல் சாவது போல் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பதாக இல்லை. துணை கதாபாத்திரமாகவே பெரிதாக நடிக்க ஆர்வமில்லை. கதாநாயகனாகதான் நடிக்க போகிறேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஒரு படத்தில் இறப்பது போல் நடித்து வெற்றி கிடைத்ததால் இப்படி ஒரு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளார் நடிகர் கலையரசன்.