Connect with us

ஸ்குவிட் கேம் மாதிரி ஒரு படம்..! கலையரசன் நடிப்பில் வெளிவந்த Trending.. படம் எப்படி இருக்கு..!

Movie Reviews

ஸ்குவிட் கேம் மாதிரி ஒரு படம்..! கலையரசன் நடிப்பில் வெளிவந்த Trending.. படம் எப்படி இருக்கு..!

Social Media Bar

நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்து தற்சமயம் வெளியான திரைப்படம் தான் டிரெண்டிங்.

youtube மாதிரியான சமூக வலைதளங்களில் மக்கள் தொடர்ந்து ட்ரெண்டாக வேண்டும் என்று பல விஷயங்களை செய்து வருகின்றனர் அதிலும் கணவன் மனைவியாக இருப்பவர்கள் தொடர்ந்து எல்லை மீறி செய்யும் விஷயங்கள் இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அதனை அடிப்படையாக வைத்து இந்த ட்ரெண்டிங் திரைப்படத்தின் கதைகளம் அமைந்து இருக்கிறது. கலையரசனும் அவரது மனைவியும் இணைந்து youtube சேனல் நடத்தி வருகின்றனர்.

அதில் பணம் சம்பாதித்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு ஸ்க்வீட் கேம் திரைப்படத்தில் வருவது போல ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அவரது வீட்டுக்குள்ளேயே இந்த கேம் நடக்கும்.

இதில் ஜெயிப்பவர்களுக்கு அதிக பணமும் கொடுக்கப்படும் என்கிற நிலை வருகிறது. இந்த நிலையில் இதில் கலையரசன் ஜெயித்தாரா இல்லையா என்பதாக கதை செல்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க வேகமான கதை களத்தைக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top