தக் லைஃபால் வந்த பிரச்சனை… அடுத்த படத்தில் கமலுக்கு வந்த சிக்கல்..!

நடிகர் கமலஹாசன் நடித்து சமீபத்தில் வெளியாகி தற்சமயம் திரையரங்குகளில் ஓடிவரும் திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருந்து வருகிறது.

சமீப காலமாகவே நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பதால் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த திரைப்படம் உண்மையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாகவே இந்த திரைப்படம் வெற்றி அடையவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

Social Media Bar

இந்த நிலையில் அடுத்து அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். இந்த திரைப்படமாவது அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்ப்புகள் இருந்தன.

ஆனால் இப்பொழுது அந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டதாக பேச்சுக்கள் இருக்கின்றன. தொடர்ந்து கமலுக்கு மார்க்கெட் குறைந்து வரும் காரணத்தினால்தான் இந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தாலும் இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.