Tamil Cinema News
முதல் படமே மாஸ் ஆக்ஷன்..! ஹீரோவாக களம் இறங்கும் கே.பி.ஒய் பாலா..!
சின்ன திரையின் மூலமாக பிரபலமாகி பலர் தொடர்ந்து சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், நடிகர் சந்தானம் போன்ற பல நடிகர்கள் சின்ன திரையில் இருந்து வந்து இப்போது வெள்ளி திரையில் மிக பிரபலமாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளின் மூலமாக அதிகமாக பிரபலமானவர்தான் கே.பி.ஒய் பாலா. மேலும் அவர் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பதற்கு அவரது உதவும் மனபான்மையும் காரணமாக இருக்கிறது.
தொடர்ந்து பொது மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் பாலா நிறைய உதவிகளை செய்து வருகிறார். பாலாவிற்கும் கூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு. சில படங்களில் உதவி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்து கதாநாயகனாக எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் பாலா. ஆதிமூலம் கிரியேஷன் என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் ஷெரிஃப் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
நடிகை அர்ச்சனா, இயக்குனர் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது ஆக்ஷன் மாஸ் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
