Cinema History
அந்த க்ராக்கு கூட எல்லாம் நடிக்க முடியாதுய்யா!.. விஜயகாந்த் பட இயக்குனரை முகத்திற்கு நேரே பேசிய மம்முட்டி!.
Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் அதிக செல்வாக்கு வாய்ந்த பிரபலங்களில் மிக முக்கியமானவர் கேப்டன் விஜயகாந்த். பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன.
இதனாலேயே அவருக்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருந்து வந்தன. முக்கியமாக ஊமை விழிகள் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு திரைப்படக்கலையை படிக்கும் மாணவர்கள் மீது விஜயகாந்திற்கு அதிக மதிப்பு வர துவங்கியது.
அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. ஆர்.கே செல்வமணி விஜயகாந்தின் திரைப்படம் மூலமாகவே தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அவரது முதல் படமான புலன் விசாரணை திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாகும். அதற்கு பிறகு விஜயகாந்தின் 100 ஆவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தையும் ஆர்.கே செல்வமணிதான் இயக்கினார்.
படத்தை விட்டு விலகிய மம்முட்டி:
இப்படியெல்லாம் தமிழில் புகழ்ப்பெற்ற இயக்குனராக இருந்தாலும் மலையாள நடிகரிடம் அவமானப்பட்டிருக்கிறார் ஆர்.கே செல்வமணி. அப்போது விஜயகாந்தும் மம்முட்டியும் நல்ல நட்பில் இருந்தனர். ஆர்.கே செல்வமணி விஜயகாந்திடம் ஒரு கதையை கூறவும் அவர் அது மம்முட்டிக்கு நன்றாக இருக்கும் என கூறியுள்ளார் விஜயகாந்த்
மம்முட்டிக்கும் அந்த கதை பிடித்துவிடவே படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் ஆரம்பம் முதலே ஆர்.கே செல்வமணியை மம்முட்டிக்கு பிடிக்கவில்லை. அதே போல மம்முட்டியின் செய்கைகளும் ஆர்.கே செல்வமணிக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் இந்த க்ராக்கு கூட எல்லாம் நடிக்க முடியாது என கூறி மம்முட்டி ஆர்.கே செல்வமணி படத்தில் இருந்து விலகினார்.
பிறகு ஆர்.கே செல்வமணியின் திரைப்படங்களை பார்த்தப்போதுதான் அவர் எவ்வளவு சிறப்பான இயக்குனர் என்பது மம்முட்டிக்கு தெரிந்திருந்தது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து அவரே ஆர்.கே செல்வமணியிடம் பேசி அந்த படத்தில் நடித்தார். பிறகு மக்கள் ஆட்சி என்கிற பெயரில் அந்த படம் வெளியானது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்