மனோரமாவுக்கு பிறகு அதே சாதனையை பண்ணுனது ஒரு ஆண் நடிகர்!. நாங்களும் கெத்துதான்!.
Actress manorama : தமிழ் சினிமாவில் ஒரு நடிகை வெகு காலங்கள் நடித்து கொண்டிருப்பது என்பது சிரமமான விஷயமாகும். இப்போது உள்ள காலக்கட்டங்களில் ஒரு 20 வருடம் சினிமாவில் நடித்து விட்டாலே பெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இளம் வயதில் சினிமாவிற்கு வந்து தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை மனோரமா. மிக இளம் வயதிலேயே பெரும் நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தார். சிவாஜி கணேசன் காலத்திலேயே இவர் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.
அப்போது மிகவும் சின்ன பெண்ணாக இருந்தார். ஆனால அப்போது துவங்கிய அவரது சினிமா பயணம் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் வரை தொடர்ந்தது. இந்த நிலையில் தமிழில் அதிகமான திரைப்படங்களில் நடித்த நட்சத்திரமாக மனோரமா பார்க்கப்படுகிறார்.

இவர் மொத்தமாக 1500க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகப்பட்சம் பெரும் நடிகர்கள் பலருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் மனோரமா. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக படம் நடித்த நடிகர் யார் என பார்க்கும்போது அடுத்த இடத்தில் நடிகர் நாகேஷ் இருக்கிறார்.
நாகேஷ் கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். பழைய சினிமாக்களில் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் கூட்டணி போட்டு பல படங்களில் நடித்திருக்கின்றனர். பிறகு இருவரும் பிரிந்த பிறகும் கூட இத்தனை படங்களில் நடித்து வெற்றி வாகை சூடியுள்ளனர்.