காசு கொடுத்தா எங்கண்ணனையே அடிப்பியா நீ!.. கலர் குடிக்க போன இடத்தில் கலவரத்தில் சிக்கிய நம்பியார்!.. பெரும் கொடுமையால இருக்கு!.

Actor Nambiyar: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் பிரபலமானவர்கள் நிறைய பேர் இருந்தனர். இந்த வில்லன் நடிகர்களால்தான் ஹீரோ நடிகர்களுக்கு அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் வந்து கொண்டிருந்தன என கூறலாம்.

இதனாலேயே சிறந்த வில்லன் நடிகர்களை ஹீரோ நடிகர்கள் விடுவதே கிடையாது. உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் நம்பியார் காம்போ அப்போது பெரும் வெற்றி கொடுத்து கொண்டிருந்தது. இதனாலே அதிகபட்சம் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் நடிக்க துவங்கினாலே அதில் நம்பியாருக்கு கண்டிப்பாக ஒரு கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

nambiyar
nambiyar
Social Media Bar

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் இயக்கப்பட்ட பொழுது அந்த திரைப்படத்தில் நம்பியரே கிடையாது. பிறகு படத்தை எடுத்து முடித்த பிறகு நம்பியார் அந்த திரைப்படத்தில் இருக்க வேண்டும் என்று யோசித்த எம்.ஜி.ஆர் திரும்பவும் நம்பியாருக்காக சில காட்சிகளை எடுத்ததாக செய்திகள் உண்டு.

இந்த நிலையில் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் வெளியான சமயத்தில் நம்பியார் மீது எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு அதிக கோபம் இருந்து வந்தது. ஏனெனில் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் சண்டையே போடத் தெரியாத ஒரு கதாபாத்திரமாக எம்.ஜி.ஆர் நடித்திருப்பார்.

ரவுடி கும்பலிடம் சிக்கிய நம்பியார்:

இந்த நிலையில் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்த நம்பியார் தாகமாக இருக்கிறது என்று ஒரு கடை பக்கம் வண்டியை நிறுத்திவிட்டு ஜுஸ் குடித்துக் கொண்டிருந்த பொழுது அவரிடம் வந்த சிலர் எங்க அண்ணனையே அடிப்பியா நீ என்று கேட்டிருக்கின்றனர்.

உடனே நம்பியார் உங்க அண்ணனே யார் என்று எனக்கு தெரியாதேப்பா என்று கூறிவும் புரட்சித்தலைவரை உனக்கு தெரியாதா? என்று கேட்கவும் அவர்கள் எம்.ஜி.ஆர் பற்றிதான் பேசுகிறார்கள் என புரிந்து கொண்டார் நம்பியார்.

ஏனப்பா அவரும் தான் என்னை அடித்தார் அதை நீங்கள் கவனிக்கவில்லையா என்று கேட்ட பொழுது அவர் உன்னை அடிக்கலாம் ஆனால் நீ எப்படி அவரை அடிக்கலாம் என்று கேட்டிருக்கின்றனர். அவரை அடிப்பதற்குதான் எனக்கு காசு கொடுக்கிறார்கள் என்று நம்பியார் கூறவே காசு கொடுத்தால் நீ அடித்து விடுவாயா என்று அவரை அந்த குழு சூழ்ந்து இருக்கின்றனர்.

அதற்குப் பிறகு சரி இனி எந்த படத்திலும் எம்.ஜி.ஆரை அடிக்க மாட்டேன் என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து இருக்கிறார் நம்பியார். இதனை ஒரு பழைய பேட்டியில் அவரே தெரிவித்தும் இருக்கிறார்.