Tamil Cinema News
அமெரிக்கால பயிர் எல்லாம் விவசாயம் பண்ணல!.. புல் விவசாயம் பண்ணியே காசு பார்த்துட்டேன்!.. நெப்போலியன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!.
தமிழில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நெப்போலியன். வளர்த்தியான தேகம் கொண்டதால் வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார் நெப்போலியன். இதனால் தொடர்ந்து நெப்போலியன்னுக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
வில்லன் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக அனைத்து விதமான நடிப்பையும் வெளிப்படுத்தக்கூடியவர் நெப்போலியன். ஏனெனில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்தாலும் கூட போக போக கதாநாயகனாக இன்னும் பல கதாபாத்திரங்களில் நடித்தார் நெப்போலியன்.
சில நாட்கள் அரசியலில் ஈடுபாடு காட்டிய நெப்போலியன் தற்சமயம் அமெரிக்காவில் செட்டில் ஆக்விட்டார். அவ்வப்போது ஏதாவது படத்தில் நடிக்க வேண்டும் என்றால் மட்டும் இந்தியாவிற்கு வந்து செல்கிறார். அமெரிக்காவில் அவர் விவசாயம் செய்து அதிக லாபமீட்டி வருகிறார்.

இதுக்குறித்து அவர் பேட்டியில் கூறும்போது அமெரிக்காவில் என்ன விவசாயம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அவர் காய்கறியோ அல்லது தானியங்களோ விவசாயம் செய்யவில்லை. மாறாக புல் விவசாயம் செய்கிறார்.
ஆம் அமெரிக்காவில் குதிரை மற்றும் மாட்டு பண்ணைகள் அதிகமாக இருக்கின்றன. அவறிற்கெல்லாம் உணவாக கொடுக்க ஒருவகை புல் அதிகமாக தேவைப்படுகின்றன. இந்த புல்லை விளைவிக்க அதிகம் கஷ்டப்பட தேவையில்லை என்கிறார் நெப்போலியன்.
அவற்றின் விதையை தூவிவிட்டு தினமும் தண்ணீர் மட்டும் விட்டால் போதும். அவை சிறப்பாக வளர்ந்துவிடும். பிறகு அவற்றை விற்றுவிடுவோம். இப்படி வருடத்திற்கு மூன்று முறை விளைவித்து விற்கிறோம் என கூறியுள்ளார் நெப்போலியன்.
