Latest News
கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய மக்கள்… தூக்கம் இல்லாமல் தவிக்கும் பார்த்திபன்.. இதுதான் காரணம்.
Actor Parthiban: தமிழ் சினிமாவில் எப்பொழுதும் சில நடிகர்களை சுற்றி கிசுகிசுகளும், சர்ச்சைகளும் சூழ்ந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் அவர்கள் பேசும்பொழுது பேட்டியில் கூறும் சில கருத்துக்கள் சர்ச்சையாகி அது அவர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி விடும்.
அந்த வகையில் சமீப காலங்களாக சர்ச்சைக்கு பெயர் போனவராக இருப்பவர் தான் நடிகர் பார்த்திபன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனரும் கூட அதனால் படங்களை பற்றி அவரிடம் ஏதாவது கேட்கும் பொழுது அவர் கூறும் கருத்தை சிலர் திரித்து கூறுவதால் அவருக்கு பெரும் பிரச்சனையாக உருவாகிறது என சமீபத்தில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நடிகர் பார்த்திபன் நிகழ்ச்சி ஒன்றில் வேதனையாக கூறிய கருத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகர் பார்த்திபன்
இவரின் இயற்பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் இருக்கிறார். இவர் முதன் முதலில் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். மேலும் பல படங்களை இயக்கி இருக்கிறார். புதிய பாதை, ஹவுஸ் ஃபுல், இவன், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு,கதை திரைக்கதை வசனம் இயக்கம், போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இவர் இயக்கிய படங்களுக்காக தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
எதனையும் தைரியமாக நேருக்கு நேராக சொல்ல கூடிய பார்த்திபன் அவ்வப்போது பேட்டிகளிலும், விழா மேடைகளிலும் பேசுவது சர்ச்சையாகி வருகிறது.
இந்தியன் 2 பற்றிய கருத்து
இந்தியன் படம் வெளியாகிய போது நிருபர்கள் இவரிடம் இந்தியன் 2 படம் பார்த்தீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தன்னுடைய படம் சரியாக ஓடி இருந்தால் அந்த மகிழ்ச்சியில் நான் சென்று இந்தியன் 2 படம் பார்த்திருப்பேன். ஆனால் என்னுடைய படம் சரியாக ஓடாத காரணத்தினால், நான் இந்தியன் படம் பார்க்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இதனை நிருபர்கள் திரித்து பத்திரிக்கையில் இந்தியன் 2 படம் சரியாக ஓடாத காரணத்தினால் இயக்குனர் பார்த்திபன் படத்தை பார்க்கவில்லை என என எழுதியுள்ளார்கள்.
இதற்கு ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத நபர்கள் அனைவரும் கெட்ட வார்த்தையில் என்னை வசை பாடி உள்ளார்கள்.
இதையெல்லாம் நான் கண்டுகொள்ளாமல் சென்றாலும் நான் எவ்வாறு அப்படி கூறினேன் என எனக்கு இரவு முழுவதும் தூக்கமே இல்லை என்று வருத்தமாக கூறியிருக்கிறார். நான் கூறுவதை பாதியாக வெட்டி, இவ்வாறு கூறினால் அதனால் பாதிக்கப்படுவது நான் தான் என அவர் கூறியிருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்