ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது பார்த்திபனா!.. அந்த கேரக்டர் அவருக்கு செமையா இருக்குமே!..

Director Vetrimaaran: தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் காம்போக்கள் வெற்றியை கொடுக்கக் கூடியவை. உதாரணத்திற்கு கவுண்டமணி செந்தில், வடிவேலு சத்யராஜ் இப்படியாக நடிகர்கள் காம்போவாக வெற்றியை கொடுப்பது போலவே நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்பது ஒரு வெற்றி கொடுக்கக்கூடிய காம்போ என கூறலாம்.

பொல்லாதவன் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். அதற்குப் பிறகு வெற்றிமாறன் ஒரு கதை எழுதினாலே அந்தக் கதையில் தனுஷ்தான் நடிப்பார் என்கிற நிலை இருந்தது.

vetrimaaran
vetrimaaran
Social Media Bar

அந்த நிலையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் ஆடுகளம் ஆடுகளம் திரைப்படம் நிறைய தேசிய விருதுகளை பெற்று தந்ததுடன் தனுஷின் நடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுவரை தமிழ் சினிமாவில் பேசப்படாத சேவல் சண்டை குறித்து முதன் முதலாக பேசிய படம் ஆடுகளம் என்பதாலேயே அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.

பார்த்திபனுக்கு வந்த வாய்ப்பு:

இந்த நிலையில் ஆடுகளம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை வெற்றிமாறன் தனது பேட்டிகள் பகிர்ந்திருக்கிறார். ஆடுகளம் திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக பேட்டைக்காரன் என்கிற கதாபாத்திரம் வரும்.

அந்த கதாபாத்திரம்தான் தனுஷிற்க்கு சேவல் சண்டையை சொல்லிக் கொடுத்திருக்கும். அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் பார்த்திபன். சொல்ல போனால் நடிகர் பார்த்திபன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அது இன்னும் படத்திற்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கும்.

ஆனால் அப்பொழுது வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் பார்த்திபன் இந்த படத்தை நிராகரித்து விட்டார். இருந்தாலும் கூட அப்பொழுது வெற்றி மாறனுக்கு பரிசு பொருள் ஒன்றை கொடுத்து அனுப்பி இருக்கிறார் பார்த்திபன். பொதுவாக பார்த்திபன் அவர் வீட்டிற்கு வருபவர்களுக்கு பரிசு பொருள் கொடுப்பது வழக்கம் என்று கூறுகிறார் வெற்றிமாறன்.