News
அந்த புள்ள பாத்ரூம்ல நான் என்னடா பண்ணுவேன்.. வெறியேத்துற மாறி கேட்ட கேள்விக்கு நடிகர் பிரபாஸ் கொடுத்த பதில்..!
சினிமாவில் நடிக்கும் நடிகர். நடிகைகள் படங்களைத் தாண்டி மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமாக இருப்பார்கள். முன்னணி நடிகர்கள் யாரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் அந்த வகையில் படத்தின் ப்ரோமோஷன். இசை வெளியீட்டு விழா. செய்தியாளர்கள் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பது அது சர்ச்சையாவது எல்லாம் வழக்கமான ஒன்றுதான்.
அந்த வகையில் பல முன்னணி நடிகர்களும் பேட்டியில் கலந்து கொண்டு அவர்கள் நடித்த படங்கள் பற்றி அல்லது அவர்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள். இந்நிலையில் தெலுங்கு மொழியின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ்.
இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு இருக்கும்போது அந்த பேட்டியை தொகுத்து வழங்கிய ஆங்கர் ஒருவருக்கு இவர் கொடுத்திருக்கும் பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார்.

பல வெற்றி படங்களை கொடுத்த பிரபாஸ் உலக அளவில் இவருக்கு அங்கீகாரம் கொடுத்த திரைப்படம் பாகுபலி . இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல படமாக அமைந்தது.
இந்நிலையில் தெலுங்கு மொழி ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் போன்ற பல மொழி ரசிகர்களையும் தன் வசப்படுத்தி இருக்கிறார் பிரபாஸ்.
ஆங்கரை கலாய்த்த நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது ஆங்கர் ஒருவர் தன் சக பெண் ஆங்கரிடம் ஒரு பாட்டு பாடு என கூறினார்.
அதற்கு அந்தப் பெண் ஆங்கர் எனக்கு பாட்டு பாட வராது. நான் ஒரு பாத்ரூம் சிங்கர் என கூறினார். அப்படி என்றால் இந்த இடத்தை பாத்ரூம் என நினைத்துக் கொண்டு பாடு, நானும் பிரபாஸ் சாரும் இந்த பாத்ரூமில் இல்லை நீ பாடு என கூறினார்.

உடனே அந்த ஆண் அங்கர் “சார் நீங்க இந்த பாத்ரூமில் இருக்கிறீர்களா? என கேள்வி கேட்டதற்கு பிரபாஸ் “நான் அந்த பெண்ணுடைய பாத்ரூமில் என்னடா செய்யப் போறேன்” என்று நகைச்சுவையாக பதில் அளித்து இருப்பார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
