Connect with us

வில்லனும் ஹீரோவும் ஒன்னு சேருறாங்க போல!.. Sonic the Hedgehog 3 படத்தின் மாஸ் ட்ரைலர் கதை என்ன?

sonic 3 movie

Hollywood Cinema news

வில்லனும் ஹீரோவும் ஒன்னு சேருறாங்க போல!.. Sonic the Hedgehog 3 படத்தின் மாஸ் ட்ரைலர் கதை என்ன?

Social Media Bar

விண்டேஜ் காலங்கள் முதலே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த விடீயோ கேம்களில் சோனிக் விளையாட்டும் ஒன்று. சோனிக் என்கிற அணில் மாதிரி இருக்கும் இந்த கதாபாத்திரத்திற்கு நிறைய வித்தியாசமான சக்திகள் இருக்கும்.

அதை வைத்து சென்ற அந்த விடீயோ கேமின் வெற்றியை தொடர்ந்து சோனிக் படமாக்கப்பட்டது. அந்த வகையில்  ஏற்கனவே வெளியான இரண்டு பாகங்கள் நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் அதன் மூன்றாம் பாகம் படமாக்கப்பட்டு வந்தது.

டிசம்பரில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் அதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட இரண்டாம் பாகத்தின் கதையோடு ஒத்துள்ளது.

படத்தின் கதை:

இரண்டாம் பாகத்தில் ஒரு சிவப்பு நிற சோனிக்தான் வில்லனாக வரும். அதற்கும் ஹீரோவுக்கும் இடையே சண்டை வரும். ஆனால் இறுதியில் அதுவும் திருந்தி ஹீரோ அணியில் சேர்ந்துவிடும். முதல் பாகம் முதலே சோனிக்கின் முக்கிய வில்லன் டாக்டர் ரோபோட்நிக் என்பவர்தான்.

ரோபோட்நிக்கை பொறுத்தவரை சோனிக் அதிவேகமாக செல்வதற்கு அது உடலில் உள்ள ஆற்றல்தான் காரணமாக அந்த ஆற்றலானது குறையவே குறையாது. எனவே அதை திருடுவதன் மூலம் உலகையே ஆள முடியும் என்பதால் தொடர்ந்து அதற்கான முயற்சியில் இருப்பார் ரோபோட்நிக்.

இந்த நிலையில் கடந்த இரண்டு பாகங்களிலுமே சோனிக் அவரை தோற்கடித்துவிடும். ஆனால் இந்த பாகத்தில் அவர் வில்லனாக வரவில்லை. மாறாக சோனிக்கின் இனத்திலேயே அதி பலசாலியான இன்னொரு விலங்குதான் வில்லனாக வருகிறது.

அதை தணித்து சோனிக்கால் ஜெயிக்க முடியாது என்கிற நிலை இருக்கிறது. எனவே வில்லன் டாக்டர் ரோபோட்நிக்கிடம் அதன் தோற்க உதவி கேட்கிறது சோனிக். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேரும் காம்போ என்பது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எனவே கண்டிப்பாக படம் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top