Connect with us

இந்த மாதிரி கோமாளிகளை எல்லாம் வச்சிக்கிட்டு!.. கங்கனா ரனாவத்தை கலாய்த்த நடிகர் பிரகாஷ்ராஜ்!.

prakash raj kangana ranaut

News

இந்த மாதிரி கோமாளிகளை எல்லாம் வச்சிக்கிட்டு!.. கங்கனா ரனாவத்தை கலாய்த்த நடிகர் பிரகாஷ்ராஜ்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். ஒரு வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி எந்த ஒரு கதாபாத்திரத்தையும் கூட சிறப்பாக செய்யக்கூடியவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இதனாலேயே இப்போதும் தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகராக பிரகாஷ்ராஜ் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே அளவு வாய்ப்பும் வரவேற்பும் இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் உண்டு. கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட இவர்தான் வில்லனாக நடித்திருந்தார்.

அதே சமயம் அரசியல் குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பல முறை சமூகம் மற்றும் அரசியல் சார்ந்து தனது குரலை பதிவு செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில் நடிகையும் பி.ஜே.பி கட்சியை சேர்ந்தவருமான கங்கனா ரனாவத்தை கேலி செய்து ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ்ராஜ் போட்ட பதிவு:

கங்கனா ரனாவத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசியிருந்தார். ஆனால் உண்மையில் இந்தியாவில் முதன் முதலாக பிரதமரானவர் ஜவர்ஹலால் நேரு ஆவார். வரலாறு இப்படியிருக்க கங்கனா ரனாவத் அதுக்கூட தெரியாமல் இருக்கிறாரே என்று பலரும் கிண்டல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வீடியோவை பதிவிட்ட பிரகாஷ் ராஜ். ஒரு சுப்ரீம் ஜோக்கர் கட்சியில் எல்லாருமே கோமாளிகள்.. என்ன ஒரு அவமானம் என பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த பதிவு தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

To Top