பேன் இந்தியா படத்துக்கு ப்ளான் பண்ணும் பிரசாந்த்.. பல பிரபலங்கள் நடிக்கிறாங்க.!
ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்று தமிழ் சினிமாவில் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த். அப்போதைய காலகட்டங்களில் அவர் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுத்தன.
சொல்ல போனால் விஜய் அஜித் மாதிரியான முன்னணி நடிகர்களை விடவுமே அதிக வசூலை பெற்றுக் கொடுக்கும் நடிகராக அப்பொழுது பிரசாந்த் இருந்தார். ஆனால் எந்த அளவிற்கு அவருடைய வளர்ச்சி என்பது வேகமாக நடந்ததோ அதே அளவிற்கு வீழ்ச்சி என்பதும் நடந்தது.
சில நாட்களிலேயே அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. அவர் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் அடுத்து தோல்வியை காண துவங்கின.

அடுத்து நடிகர் பிரசாந்த் நடிக்கும் படம்:
இப்பொழுது பெரிதாக அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் என்பதே இல்லாமல்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டு இருந்தார் பிரசாந்த்.
ஆனால் அந்த படத்தின் கதை அவருக்கு ஒத்துவரவில்லை என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. கோட் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு இயக்குனர் ஹரியின் திரைப்படத்தில்தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் இப்பொழுது துவங்குமா என்று தெரியாத நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் தியாகராஜன் தயாரிப்பில் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் நடிகர் பிரசாந்த். இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன் ஐஸ்வர்யாராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.