Cinema History
எம்.ஜி.ஆர் படம் ஒண்ணும் அவ்வளவு முக்கியம் இல்லை!.. கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்த நடிகர்!.
MGR : பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பது என்பது தவறவிட முடியாத ஒரு விஷயமாகும். ஏனெனில் பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தை அதிக மக்கள் பார்ப்பார்கள். இதனால் அதில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் வரவேற்பு கிடைக்கும்.
உதாரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் நிறைய நடிகர்கள் நடித்திருப்பதை காண முடியும். ஏனெனில் அதில் நடித்ததன் மூலமாக அவர்கள் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
அதனாலயே அவர்களுக்கு லோகேஷ் கனகராஜும் வாய்ப்புகளை வழங்குவார் இதேபோல கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் பெரும் நடிகர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆரும் சிவாஜி கணேசனும் தான்.
இவர்கள் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என்று பலரும் காத்து கொண்டிருக்கும் பொழுது வாய்ப்பு கிடைத்தும் அதை நிராகரித்துள்ளார் ஒரு சின்ன நடிகர். ஆம், ஆர்.எஸ் மனோகர் என்கிற அந்த நடிகர் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து வந்துள்ளார்.
கைதி கண்ணாயிரம் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இவருக்கு சினிமாவை விட நாடகத்தில்தான் அதிக பற்று உண்டு. இவர் ஒரு நாடக கம்பெனியும் நடத்தி வந்தார். இந்த நிலையில் ஒருமுறை அவருக்கு நாடகம் இருந்த நாளிலேயே எம்.ஜி.ஆருடன் படம் நடிப்பதற்கான வாய்ப்பை கிடைத்திருக்கிறது.
அதற்கு முன்பு வரை அவர் எம்.ஜி.ஆருடன் படம் நடிக்கவில்லை. சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வேறுப்படங்களில்தான் நடித்திருந்தார். இருந்தாலும் நாடகம்தான் தனக்கு முக்கியம் என்று கூறி அன்று அந்த எம்.ஜி.ஆர் பட வாய்ப்பை உதறி தள்ளினார்.
ஆர்.எஸ் மனோகர் அதன் பிறகு எம்.ஜி.ஆர் படங்களில் அவர் வில்லனாக நடித்திருந்தாலும் கூட ஒரு சின்ன நடிகர் பெரும் நடிகரின் படத்தின் வாய்ப்பை அவரே நிராகரித்தது பெரும் விஷயமாகும். அந்த அளவிற்கு நாடகத்தின் மீது அன்பு கொண்டிருந்தால் ஆர்.எஸ் மனோகர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்