Connect with us

பெரிய ஹீரோக்களுக்கு கூட கிடைக்கல.. கண்ணீர் விடும் எஸ்.ஜே சூர்யா.. இதான் காரணம்!.

sj surya

News

பெரிய ஹீரோக்களுக்கு கூட கிடைக்கல.. கண்ணீர் விடும் எஸ்.ஜே சூர்யா.. இதான் காரணம்!.

Social Media Bar

S.J. Suryah: சினிமாவில் பன்முகங்களைக் கொண்ட நடிகர்கள் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். அந்த வகையில் இயக்குனராக இருப்பவர் நடிகர்களாகவும், நடிகர்களாக இருப்பவர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், மேலும் பாடகராகவும் பன்முகங்களைக் கொண்டவர்கள் சினிமா துறையில் சாதித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தங்களது கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் பல வெற்றிக்கனிகளை சுவைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் ஒரு சிலர் சினிமாவில் தங்களின் லட்சியம் இது என்று நினைத்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு அமைந்தது ஒரு விதமாக இருக்கும். ஆனால் அதனையும் சிறப்பாக செய்து தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்டிருக்கும் நிலையைப் பற்றி தெரிவித்திருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எஸ்.ஜே. சூர்யா

எஸ்.ஜே.சூர்யா இவரின் உண்மையான பெயர் எஸ். ஜஸ்டின் செல்வராஜ். இவர் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் போன்ற பன்முகங்களைக் கொண்டவர்.

இவரின் ஆரம்ப காலகட்டம் பெரும் சோதனையான காலகட்டம் என அவர் பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடித்த “வாலி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது இதனால் இவரை நட்சத்திர இயக்குனராக அனைவரும் கொண்டாடினார்கள்.

sj.suriya

அதன் பிறகு அவர் இயக்கிய “குஷி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு படங்கள் வெற்றி படங்களாக கொடுத்ததால் அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஏற்பட்ட நிலை

பல படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா பல படங்களில் நடித்தும் வந்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில் அவரே கதாநாயகனாகவும் நடித்து வந்திருக்கிறார்.

மீண்டும் அவர் தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார். இவரை தற்பொழுது அனைவரும் “நடிப்பு அரக்கன்” என அடைமொழி வைத்து அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டை பெற்று வருகிறது.

தற்பொழுது இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் நீங்கள் இதுவரை எட்டு பேட்டிகள் அட்டென்ட் செய்து வந்திருக்கிறீர்கள். தற்பொழுது கூட ஒரு பேட்டி முடித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். இவ்வாறு பிஸியாக உள்ளீர்களே அதைப் பற்றி கூறுங்கள் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆமாம் தற்பொழுது நான் மிகவும் பிசியாக இருக்கிறேன் எனக்கூறி அவருக்கு அடுத்தடுத்து இருக்கும் பல படங்களின் பெயர்களை பட்டியலிட்டார். மேலும் தெலுங்கு படத்திற்கும் தான் நடிக்க செல்ல வேண்டும் எனவும், மிகவும் பிசியாக இருக்கிறேன் எனவும் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்து ள்ளார்.

பெரிய ஹீரோக்கள் கூட இவ்வளவு படங்களில் கமிட் ஆகவில்லை. ஆனால் வரிசையாக படம் கமிட் ஆனதால் நிற்க நேரம் இல்லாமல் இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா

To Top