Connect with us

இன்னமும் கட்டுடல் மேனியா இருக்க இதுதான் காரணம்.. சரத்குமாரின் தினசரி உணவு டயட். அவரே சொல்றாரு கேளுங்க!..

sarathkumar

News

இன்னமும் கட்டுடல் மேனியா இருக்க இதுதான் காரணம்.. சரத்குமாரின் தினசரி உணவு டயட். அவரே சொல்றாரு கேளுங்க!..

Social Media Bar

Sarathkumar: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். இவர் பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.

தற்பொழுதும் ஒரு சில நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறார். சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கிய சரத்குமார், தனியாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கி அதனை வழிநடத்தியும் வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த சரத்குமார் தற்பொழுது வரை இன்னும் பழைய சரத்குமார் போன்றே தோற்றமளிக்கிறார். இதனைக் குறித்து சேனல் ஒன்றில் பேட்டியில் கூறிய சரத்குமார், அவரின் டயட் ரகசியத்தை கூறியிருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமாவில் முதன் முதலில் அவர் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பிறகு சூரியன் என்ற படத்தின் கதாநாயகனாக நடித்தார்.

அதன் பிறகு இவர் பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த நாட்டாமை, சூரிய வம்சம், நட்புக்காக, சேரன் பாண்டியன், ஐயா போன்ற திரைப்படங்கள் இவருக்கு சிறந்த படங்களாக அமைந்தது.

Sarathkumar

இவர் சிறந்த நடிகருக்கான விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, ஃபிலிம் ஃபேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, எம்ஜிஆர் விருது, செவாலியே சிவாஜி கணேசன் விருது, சைமா விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

மேலும் அதன் பிறகு இவர் அரசியல் கட்சியை தொடங்கி கடந்த 2011 இல் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினராக பணியாற்றினார்.

சரத்குமாரின் ரகசிய டயட்

அவர் நடித்த பழைய படங்களில் சரத்குமார் எவ்வாறு இருந்தாரோ தற்போது வரை அவ்வாறாகவே காட்சியளிக்கிறார். சமீபத்தில் சேனல் ஒன்றில் பெட்டியில் அவரிடம் உங்களின் டயட் ரகசியத்தை கூற முடியுமா? என கேள்வி கேட்டதற்கு அவர் தன்னுடைய டயட் உணவு பற்றி கூறியிருக்கிறார்.

காலையில் எழுந்ததும் பிளாக் காபியில் நெய் கலந்து குடிப்பாராம். மேலும் 9 மணி அளவில் 4 அவித்த முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவாராம்.

11 மணியளவில் ஏதாவது ஒரு பழத்தின் ஜூஸ் குடிப்பார் அல்லதுABC ஜூஸ் குடிப்பாராம்.

மதியம் 2 பீஸ் சிக்கன் மற்றும் வேக வைத்த காய்கறிகள் சாப்பிடுவாராம். மேலும் 4 மணியளவில் வேகவைத்த வேர்க்கடலையுடன் அவல் சாப்பிடுவாராம்.

இரவு மட்டன் அல்லது சிக்கன் சூப் சாப்பிடுவாராம். இதுதான் என்னுடைய தினசரி உணவு டயட் என சரத்குமார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

To Top