Connect with us

சூர்யவம்சம் பார்ட் 2ல நடிக்கிறதுக்கு என் பையனுக்கு விருப்பமில்லை!.. ஓப்பனாக கூறிய சரத்குமார்.!

sarathkumar

News

சூர்யவம்சம் பார்ட் 2ல நடிக்கிறதுக்கு என் பையனுக்கு விருப்பமில்லை!.. ஓப்பனாக கூறிய சரத்குமார்.!

Social Media Bar

Suryavamsam 2 : தமிழில் உள்ள முன்னணி கதாநாயகர்களில் ஒரு காலத்தில் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் சரத்குமார். சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அவர்களை போலவே வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த ஒரு நபர்தான் சரத்குமாரும்

இந்த மூவருக்குமே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் மூவருக்குமே ஒரே சமயத்தில் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பிறகு இவர்கள் மூவருமே அவர்களுக்குள்ளே போட்டி நடிகர்களாக மாறினர்.

இருந்தாலும் கூட தன்னுடைய போட்டி நடிகர் என்று பாராமல் விஜயகாந்த் இவர்கள் இருவருக்குமே நிறைய வாய்ப்புகளை வாங்கி கொடுத்திருக்கிறார். இது குறித்து சரத்குமார் கூட ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். புலன் விசாரணை திரைப்படத்தில் விஜயகாந்திற்கு வில்லனாக சரத்குமார் நடித்த பிறகு அதே சரத்குமார் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் விஜயகாந்தின் நண்பனாக நடித்தார்.

சரத்குமாருக்கு பெரும் வெற்றி கொடுத்த முக்கியமான திரைப்பட வரிசையில் சூரிய வம்சத்திற்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு. இப்பொழுது வரை தொலைக்காட்சிகளில் சூரியவம்சம் திரைப்படம் ஓடும்பொழுது அதை பார்ப்பதற்கு மக்கள் வரவேற்பு அளிப்பதை பார்க்க முடியும்.

சூரிய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதாக இருந்தால் அதில் இரண்டு சரத்குமார் நடிப்பார்களா? அல்லது சரத்குமாரின் மகனை நடிக்க வைப்பார்களா என்று சரத்குமாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரத்குமார் கூறும் பொழுது என் மகனுக்கு பெரிதாக சினிமாவின் மீது ஆர்வம் கிடையாது.

எனவே சூர்யவம்சம் இரண்டாம் பாகம் எடுத்தால் எனக்கு மகனாக நடிக்க வைக்க வேறொரு நபரை தான் தேட வேண்டும் எனது மகனுக்கு விளையாட்டு மீது தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது எனவே அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார் சரத்குமார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top