Connect with us

35 வருடங்களாக செய்த உதவி.. சரத்குமார் குறித்து யாரும் அறியாத உண்மை..!

Tamil Cinema News

35 வருடங்களாக செய்த உதவி.. சரத்குமார் குறித்து யாரும் அறியாத உண்மை..!

Social Media Bar

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதற்குப் பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சரத்குமார். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே ஒரு வரவேற்பு இருக்க தான் செய்கிறது.

ஆனால் இளைய தலைமுறையினரின் வருகைக்குப் பிறகு சரத்குமார் பெரிதாக வரவேற்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இருந்தாலும் கூட திரைப்படங்களில் தொடர்ந்து ஏதாவது ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

சமீபத்தில் கூட அவர் நடித்த 3BHK என்கிற திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சரத்குமார் தன்னுடன் இருந்து வரும் உதவியாளருக்கு செய்த உதவி குறித்து சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முத்து என்பவர் தொடர்ந்து சரத்குமாருடன் பல வருடங்களாக இருந்து வருகிறார் 35 வருடங்களாக இவர் சரத்குமாரிடம் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முத்துவின் மகளை மருத்துவராகியிருக்கிறார் சரத்குமார். அதேபோல முத்துவின் மகனை வெளிநாட்டில் படிக்க வைத்திருக்கிறார்.

தொடர்ந்து முத்துவின் பிள்ளைகளின் கல்விக்கு சரத்குமார் தான் உதவி செய்து வருகிறார் என்கிற தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

To Top