Connect with us

எத்தனை தடவையா கீழ தள்ளி விடுவீங்க!.. வடக்குப்பட்டி ராமசாமி படப்பிடிப்பில் அவதிக்குள்ளான காமெடி நடிகர்!..

vadakkupatti ramasamy

News

எத்தனை தடவையா கீழ தள்ளி விடுவீங்க!.. வடக்குப்பட்டி ராமசாமி படப்பிடிப்பில் அவதிக்குள்ளான காமெடி நடிகர்!..

Social Media Bar

Vadakkuppatti ramasamy movie: காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சந்தானம் தொடர்ந்து தமிழின் முக்கியமான காமெடி நடிகராக மாறினார். சந்தானம் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவரது காமெடிக்காகவே வெற்றியை பெற்றன.

இதனை தொடர்ந்து ஒரு காமெடி கதாநாயகனாக நடிப்பதற்கு முடிவு செய்தார். அதனை தொடர்ந்து அடுத்து கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகனாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சந்தானம் தற்சமயம் வடக்குப்பட்டி ராமசாமி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும் பெற்றது. டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு அதற்கு இணையான காமெடி காட்சிகளை கொண்ட திரைப்படமாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் இருப்பதாக கூறப்படுகிறது.

vadakkupatti ramasamy
vadakkupatti ramasamy

மேலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வெகுநாட்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்சமயம் சந்தானம் திரைப்படத்தில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஷேசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ1 திரைப்படத்திலேயே இவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு காட்சியில் அவதிக்குள்ளானதை ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஓடி போய் அவர் சாக்கடையில் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவர் ஓடி வந்து சாக்கடையில் குதிக்கும்போது அது கேமிராவில் பதிவாகவே இல்லை. ஏனெனில் சாக்கடையானது கேமிராவின் வரம்பை தாண்டி இருந்தது.

சரி என இரண்டாவது தடவை படமாக்கப்படும்போதும் அதே மாதிரி அவர் போய் சாக்கடையில் குதிக்கவே அப்போதும் அது படமாக்கப்படவில்லை. இதனால் கோபமாக ஷேசு ஏன் அந்த காட்சியை படமாக்கவில்லை. இதை ஒரு குறையாக பேட்டியில் பேசியிருந்தார் ஷேசு.

To Top