பெரிய இயக்குனரால் சினிமா வாய்ப்புகளை இழந்தேன்… நடிகர் சித்தார்த்..!

இளம் வயது முதலே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்து வந்தார் நடிகர் சித்தார்த்.

அதற்குப் பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருக்கும் பொழுது ஆயுத எழுத்து மாதிரியான திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் சித்தார்த்.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் இவருக்கு அறிமுக படமாக அமைந்தது. அந்த படத்தில்தான் கதாநாயகனாக அறிமுகமானார் சித்தார்த். இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் அவர் பேட்டியில் பேசியிருந்தார்.

வாய்ப்பை இழந்த சித்தார்த்:

அப்பொழுது அவரிடம் கேட்கும் பொழுது பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. சிறந்த அறிமுக நடிகர் என்று எனக்கு அந்த படத்திற்காக விருதுகள் கொடுத்தார்கள்.

siddharth
siddharth
Social Media Bar

அப்பொழுதும் நான் மேடையில் பேசும் பொழுது இந்த விருதுக்கும் மதிப்பு இருக்க வேண்டும் என்றால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

ஆனால் தெலுங்கில்தான் அப்பொழுது எனக்கு வாய்ப்பு கிடைத்தது தெலுங்கில் நான் நடித்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நான் நடித்த படம் வெற்றியை கொடுத்தது.

அதற்கு பிறகு தான் மீண்டும் தமிழில் வாய்ப்புகள் எனக்கு கிடைக்க துவங்கியது என்று கூறியிருக்கிறார் சித்தார்த். அதாவது ஷங்கர் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் சில காலங்களுக்கு வாய்ப்பை இழந்து இருக்கிறார் நடிகர் சித்தார்த்.