Cinema History
சாவுறதுக்குள்ள அதை பண்ணிடனும்.. ஆசை நிறைவேறாமலே இறந்த சிவாஜி கணேசன்!.. நிறைவேற்ற சத்யராஜ் செய்த சம்பவம்!.
Sivaji Ganeshan : தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாஜி கணேசன்.
முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து சிவாஜி கணேசனுக்கு தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் வரத் துவங்கின. ஏற்கனவே நாடகங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியவர் என்பதால் சினிமாவில் நடிப்பது என்பது சிவாஜி கணேசனுக்கு ஒன்றும் கடினமான காரியமாக இருக்கவில்லை.
நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பலவகையிலான புதிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனுக்கு சிவாஜி என பெயர் வைத்தவர் தந்தை பெரியார்தான். அவரது பெயர் கணேசன் என்றுதான் இருந்தது. அவரது முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்தில் கூட அவரது பெயர் கணேசன் என்று தான் போடப்பட்டிருக்கும்.
சிவாஜி கணேசனின் நெடுநாள் ஆசை:
ஆனால் சிவாஜி பற்றிய நாடகம் ஒன்றில் அவர் நடிக்கும் போது அதை பார்ப்பதற்கு பெரியாரும் வந்திருந்தார். அப்பொழுது அந்த நாடகத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பை கண்டு பிரமித்து போன பெரியார் தான் அவருக்கு சிவாஜி கணேசன் என்ற பெயரை வைத்தார்.
இந்த நிலையில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய திரைப்படங்களில் சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். அதில் முக்கியமாக வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன் மாதிரியான நிஜமாக வாழ்ந்த மனிதர்களின் வரலாற்றிலும் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன்.
அந்த வகையில் அவருக்கு தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும். அதில் தானே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் உயிர் உள்ளவரை சிவாஜி கணேசனால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை.
அதற்கு பிறகு பெரியார் கதை திரைப்படமாக்கப்பட்ட பொழுது அதில் சத்யராஜ் பெரியாராக நடித்தார். கிட்டத்தட்ட பெரியார் போலவே அதில் நடித்திருந்தார் சத்யராஜ் அந்த வகையில் சிவாஜி கணேசனின் ஆசையை சத்யராஜ்தான் இறுதியில் நிறைவேற்றினார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்