Tamil Cinema News
சூரிக்கு ஜோடியாக நடிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை.. யார் தெரியுமா?.
தமிழ் சினிமாவில் பல காலங்களாக கஷ்டப்பட்டு தற்சமயம் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து போராடி வந்துள்ளார் நடிகர் சூரி.
ஒரு காமெடி நடிகராக பிரபலமடைய வேண்டும் என்பதுதான் அவர் ஆசையாக இருந்தது. கதாநாயகனாக மாறியது என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்று என்றுதான் கூற வேண்டும்.
விடுதலை திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் கதாநாயகனாக தன்னை உருவாக்கிக் கொண்டார் சூரி . அதற்கு பிறகு அவர் நடித்த கொட்டுக்காளி கருடன் மாதிரியான திரைப்படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.
இப்பொழுது தமிழ் மக்களை பொறுத்தவரை சூரி நடிக்கும் திரைப்படங்களுக்கு அவர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல சூரியும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சூரியுடன் இணையும் நடிகை:
இந்த நிலையில் அடுத்ததாக அவருடைய நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. விடுதலை 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூரி.
விலங்கு என்கிற வெப் தொடரை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியன். இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பெரிய நடிகைகள் சூரிக்கு ஜோடியாக நடிக்க துவங்கியது மூலம் தற்சமயம் சூரி வளர்ந்து வரும் நடிகராக மாறி இருக்கிறார் என்று தெரிகிறது. ஏனெனில் மார்க்கெட் இருக்கும் நடிகர்களோடு மட்டும்தான் ஐஸ்வர்யா லட்சுமி மாதிரியான பெரிய நடிகர்கள் நடிப்பார்கள். எனவே போகப் போக இன்னும் முக்கிய நடிகைகள் கூட சூரிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
