சினிமாவில் தற்போது வாரிசு நடிகர்கள் பலரும் நடித்து வருகிறார்கள். இவ்வாறு சினிமா பின்புலத்தைக் கொண்டு சுலபமாக வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக பல கஷ்டங்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியதாய் இருக்கும்.
அவ்வாறு அவர்களின் திறமையை வெளிக்காட்டினால் மட்டுமே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற முடியும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் நடித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கும் வேளையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் மகன் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்க இருக்கிறார்.
அவர் பிரபல காமெடி நடிகர் ஒருவருக்கு கதை கூற அவர் அந்த படத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூரி
காமெடியனாக தன்னுடைய வாழ்க்கை தொடங்கிய சூரி தற்போது பல முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் நடிப்பில் வெளிவந்த விடுதலை, கருடன் என அடுத்தடுத்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இதனால் நடிகர் சூரியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் எழுந்துள்ளது. மேலும் அவை நடிப்பில் அடுத்ததாக வெளியாகப் போகும் கொடுக்காளி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வரும் வேளையில் படத்தின் டிரைய்லர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

காமெடியானாக இதுவரை மக்களை மகிழ்வித்து வந்த சூரி தற்போது பல முக்கிய கதைகளை தேர்வு செய்து தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரியிடம் பிரபல நடிகர் விஜய்யின் மகன் ஜோசன் விஜய் கதை கூறியதாகவும், ஆனால் அந்த கதையை சூரி நிராகரித்து விட்டதாகவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சூரி விளக்கம் அளித்து இருக்கிறார்.
கதையை நிராகரித்ததற்கான காரணம்
சினிமா நடிகர்களின் வாரிசுகள் திரைப்படங்களில் நடிகர்களாக நடிக்க ஆசைப்படும் வேளையில் விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் இயக்குனராக வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, தற்போது தன்னுடைய முதல் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷனில் இயக்க இருக்கிறார்.
மேலும் தன்னுடைய திரைக்கதை பணியில் பிஸியாக இருக்கும் ஜோசன் சஞ்சய் படத்திற்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் விஜயின் மகன் நடிகர் சூரியிடம் ஒரு படத்தின் கதையை கூறியிருக்கிறார். இதை கேட்ட சூரி ஜோசன் சஞ்சயிடம் கதை அருமையாக இருக்கிறது எனவும், நிச்சயம் இந்த படம் வெற்றி அடையும். ஆனால் இது போன்ற படங்களில் நடித்தால் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நீங்கள் இந்த படத்தை வேறு ஒரு மாஸ் ஹீரோ வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறிவிட்டாராம்.






