அஞ்சு ஹீரோயினும் வந்தாலும் எனக்கு ஓ.கே… சூரிக்கு இப்படி ஒரு ஆசை வேற இருக்கா?..
Soori: தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி நடிகராக தற்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்திருப்பவர்கள் பலர் உள்ளார்கள். மேலும் ஒரு சிலர் காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நிலையில், இனி நடித்தால் நடிகராக மட்டுமே தான் நடிப்பேன் எனக்கூறி தங்களுடைய வாழ்க்கையும் தொலைத்திருக்கிறார்கள்.
தற்பொழுது காமெடியனாக இருந்து பல படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தான் சூரி. தன்னுடைய சினிமா பயணத்தை காமெடியானாக தொடங்கி தற்பொழுது நடிகராக உருவெடுத்துள்ளார்
அவர் சமீபத்தில் விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நடந்த நிகழ்வு தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூரி
இவரின் உண்மையான பெயர் ராமலக்ஷ்மணன் முத்துச்சாமி. ஆனால் படத்திற்காக தன்னுடைய பெயரை சூரி என மாற்றிக்கொண்டார். தமிழ் படங்களில் மட்டும் நடித்து வரும் சூரி பல படங்களில் நடித்திருந்த பொழுதும், அவருக்கு கடந்த ஆண்டு 2009 இல் வெளியான வெண்ணிலா கபடி குழு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் அன்றிலிருந்து அவரை அனைவரும் பரோட்டா சூரியனை அழைத்தார்கள்.

அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் நடித்த அனைத்து படங்களிலும் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் பல படங்களில் ஹீரோவிற்கு துணை நடிகராகவும் காமெடியனாகவும் நடித்திருக்கிறார்.
முன்னணி நடிகர் சூரி
இந்நிலையில் வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தின் மூலம் முன்னணி நடிகராக மாறினார். இது விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. மேலும் இவர் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் இரண்டு சைமா விருதுகளை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தொகுப்பாளர் ஐந்து நடிகைகளின் படங்களை காண்பித்து அடுத்த படத்தில் உங்களுக்கு நடிப்பதற்கு இதில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு சூரி ஐந்து நடிகைகளுமே எனக்கு ஓகே தான். ஆனால் வெற்றிமாறனின் படத்தில் நிச்சயம் எனக்கு கதாநாயகிகளை எதிர்பார்க்க முடியாது. வேண்டுமானால் நெல்சனின் படத்தில் நான் நடித்துக் கொள்கிறேன் என நகைச்சுவையாக பதில் அளித்து இருப்பார்.