News
கொட்டுக்காளி படத்தை நான் நம்புறதுக்கு வெற்றிமாறனும் காரணம்.. சூரி கொடுத்த ஓப்பன் டாக்!.
சினிமாவில் பொதுவாக காமெடி நடிகர்களாக இருக்கும் ஒரு சிலர் தங்களுக்கு கிடைத்த நகைச்சுவை கதாபாத்திரத்தை பல படங்களிலும் தங்களுடைய அருமையான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மத்தியில் இடம் பிடிப்பார்கள்.
அந்த வகையில் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நகைச்சுவை நடிகர்கள், பல்வேறு மொழி ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்கள். அதுபோல தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சூரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் ஆவார்.
மேலும் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த அத்தனை படங்களிலும் ரசிகர்களை விழுந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு அவரின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்நிலையில் பல படங்களிலும் முன்னணி நடிராக நடித்து வரும் சூரி தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது அவர் கூறியிருக்கும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
நடிகர் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம்
நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பாகம் ஒன்றில் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதை அடுத்து அவர் நடித்த கருடன் படமும் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனால் நடிகர் சூரிக்கு முன்னணி கதாபாத்திரம் பொருத்தமாக உள்ளது என்று ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இந்நிலையில் தான் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சூரி. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பென் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ்.கே ப்ரொடக்க்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்.
சூரி பிரபல பேட்டி ஒன்றில் பேசியது
கொட்டுக்காளி படத்தை பற்றி பேசும் போது நடிகர் சூரி கூறியதாவது, இந்தப் படத்தின் டிரைலரில் என்னை பார்த்திருப்பீர்கள். முன்பிருந்த தோற்றத்திற்கும், தற்போது மாறுபட்ட ஒரு லுக்கில் நான் தோன்றியிருப்பேன். இதற்குக் காரணம் இயக்குனர் வினோத் ராஜ் தான்.
அவர் முன்னதாக கூழாங்கல் திரைப்படம் இயக்கி அது ஆஸ்கார் வரை சென்று வந்தது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். இவ்வளவு திறமை கொண்ட இயக்குனர் வினோத் ராஜ், இந்த திரைப்படத்தின் மூலம் இன்னும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவார். இந்த திரைப்படம் என்னை இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் சினிமாவில் வேறு இடத்திற்கு கொண்டு செல்லும். அதையெல்லாம் விட இயக்குனர் வெற்றிமாறனுக்கு, வினோத் ராஜை மிகவும் பிடிக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
