Tamil Cinema News
அதுல என்ன சார் ஆம்பள.. பொம்பளை இருக்கு… தமன்னா பற்றி பேசிய தயாரிப்பாளரை நேரடியாக கேட்ட ஸ்ரீ காந்த்..!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் ஸ்ரீ காந்த். அவர் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் இப்போதும் கூட ரசித்து பார்க்கும் வகையிலான திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களாக நடிக்க துவங்கினார் ஸ்ரீ காந்த்.
அப்படியாக அவர் நடித்த போஸ் மாதிரியான சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன என்றாலும் தொடர்ந்து அஜித் விஜய் மாதிரி ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக ஸ்ரீ காந்தால் வர முடியவில்லை. இந்த நிலையில் அவர் பாதியிலேயே சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார்.
தற்சமயம் மீண்டும் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த். இந்த நிலையில்தான் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ராஜனை விமர்சித்து பேசியிருந்தார் ஸ்ரீகாந்த்.
ராஜன் முன்பு ஒரு பேட்டியில் பேசும்போது, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபமாம். ஆடியன்ஸ்க்கே உங்க மேலதான் கோபம், அந்த படத்துல நடிகை ஹீரோவுக்கு சரக்கை ஒடைச்சி கொடுத்துட்டு அவளும் குடிக்கிறா. இதெல்லாம் என்ன காட்சி.
அதே மாதிரி 4 அடி பாவாடையை எடுத்து அதை ஏழு இடத்தில் கிழிச்சி நடிகைக்கு மாட்டி விடுறாங்க. ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னாவுக்கு அதைதான் பண்ணி விட்டாங்க என பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஸ்ரீகாந்த் சார் சரக்கடிக்கிறதை பொறுத்தவரை அதில் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. யார் குடிச்சாலும் தப்புதான். அதே போல பொண்ணுங்க என்ன உடை போடணும்னு நீங்க முடிவு பண்ணாதீங்க. அதை அவங்கதான் முடிவு பண்ணனும்.
அவங்க மறுக்குறதுக்கான சூழ்நிலையை அவங்கதான் உருவாக்கிக்கணும். இப்ப சாய் பல்லவியை இந்த மாதிரி உடை அணிந்து நடிக்க வைக்க சொல்ல முடியுமா? எனவே வேண்டாம்னு சொல்ல நடிகைகள் பழகிக்கணும் என கூறியுள்ளார் ஸ்ரீ காந்த்.
