Connect with us

மனுசங்களுக்கு உதவி பண்றது சாதாரணம்.. ஆனா இது வேற லெவல்!.. ரசிகருக்கு விலை உயர்ந்த பரிசு கொடுத்த சூர்யா!.

surya

News

மனுசங்களுக்கு உதவி பண்றது சாதாரணம்.. ஆனா இது வேற லெவல்!.. ரசிகருக்கு விலை உயர்ந்த பரிசு கொடுத்த சூர்யா!.

Social Media Bar

Actor Surya: நடிகர் சூர்யா சினிமாவிற்கு வந்த காலம் முதலே மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வருகிறார். முக்கியமாக குழந்தைகளின் கல்விக்கு சூர்யா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதற்காகவே அகரம் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூர்யா.

இதன் மூலம் படிப்பதற்கு கஷ்டப்படும் குழந்தைகளுக்கு நிதி வழங்கி வருகிறார். இதே போல நடிகர் ராகவா லாரன்ஸும் பலருக்கும் உதவி வருகிறார். பிரபலங்கள் பலர் இப்படி அறக்கட்டளை வைத்து மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் வந்ததை பார்க்க முடியும். அந்த இடங்களில் வீடுகளில் தங்கியிருந்தவர்கள் கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் பல இளைஞர்கள் தன்னார்வலார்களாக முன் வந்து அவர்களுக்கு உதவிகளை செய்தனர்.

சூர்யா கொடுத்த பரிசு:

இந்த நிலையில் விஜய்யின் மக்கள் இயக்க ரசிகர்களும் அப்போது கள பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அதே போல சூர்யாவின் ரசிகர்களும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நிலையில் வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவிய ரசிகர்களை கௌரவிக்கும் விதமாக விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் சூர்யா.

இந்த விழாவில் களப்பணியில் பங்காற்றிய பலருக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதில் ஒரு நபருக்கு மட்டும் மிகவும் விலை உயர்ந்த பரிசை வழங்கினார் சூர்யா. அதற்கு என்ன காரணம் என பார்க்கும்போது வெள்ளம் வந்த சமயத்தில் மக்களுக்கு பலரும் உதவி செய்தனர்.

ஆனால் அங்குவ் வாழும் நாய் பூனை போன்ற வாயில்லா ஜீவன்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அந்த நபர் அவைகளுக்கெல்லாம் சாப்பாடு போட்டுள்ளார். அதை பார்த்து நெகிழ்ந்த சூர்யா அவருக்கு பரிசை வழங்கியிருக்கிறார்.

To Top