பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகும் நடிகர் சூர்யா.. இதுதான் காரணமாம்?.. அந்த அளவுக்கு போயாச்சா?
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விஜய் அஜித் ஆகிய இரண்டு நடிகர்களுக்கும் போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. இப்பொழுதும் நடிகர் சூர்யாவிற்கு இருக்கும் வரவேற்பு என்பது குறையவே இல்லை.
மலையாள சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு பிறகு அதிகமாக பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகராக சூர்யா இருந்து வருகிறார். அஜித்தை விடவும் அங்கு சூர்யாவிற்கு அதிக மார்க்கெட் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்சமயம் சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. இந்திய அளவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் வருகை:
இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் வேட்டையன் திரைப்படம் அன்று வெளியான காரணத்தினால் இதன் வெளியீடு தேதி என்பது மாற்றி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சூர்யா நடித்த கங்குவா படத்தின் ப்ரோமோஷன்காக தமிழில் தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக பேச்சுக்கள் இருந்தன.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக செல்லாமல் சிறப்பு விருந்தினராக சூர்யா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்திய அளவில் பிரபலமடையும் படத்திற்கு தமிழ் பிக் பாஸில் எதற்கு சூர்யா பிரமோஷன் செய்ய வேண்டும் என்கிற கேள்வியும் இருந்து வந்தது.
பிறகுதான் தெரிந்தது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்சமயம் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப் போவதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி தன்னுடைய திரைப்படத்தை அவர் பிரமோஷன் செய்ய போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.