Connect with us

அதை மட்டும் செஞ்சிருந்தா கேப்டனை இழந்திருக்க மாட்டோம்!.. மனதில் உள்ளதை கொட்டிய நடிகர் தியாகு!.

thiyagu vijayakanth

Cinema History

அதை மட்டும் செஞ்சிருந்தா கேப்டனை இழந்திருக்க மாட்டோம்!.. மனதில் உள்ளதை கொட்டிய நடிகர் தியாகு!.

Social Media Bar

Actor Vijayakanth: சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்தை பொருத்தவரை பார்ப்பதற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபராக தெரிந்ததால் கிராமத்து மக்களுக்கு நெருக்கமான ஒரு கதாநாயகனாக மாறினார்.

மேலும் அவரது திரைப்படங்களிலும் அதிகபட்சம் கிராமத்தை சேர்ந்த ஒரு நபராகதான் விஜயகாந்த் நடித்திருப்பார். இதனால் அவருக்கு கிராமத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அதனை தொடர்ந்து அதிகமான திரைப்படங்களில் நடித்து வந்தார் விஜயகாந்த்.

பிறகு அரசியல் கட்சி தொடங்கிய விஜயகாந்த் அதன் மூலம் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். தொடர்ந்து அதற்கான முயற்சிகளிலும் இருந்தார். அதிகபட்சமாக எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகினார்.

Vijayakanth
Vijayakanth

ஆனால் விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல் நலக் கோளாறின் காரணமாக சீக்கிரமாக அரசியலில் இருந்து அவர் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. விஜயகாந்த் காலமான பிறகு அவரைக் குறித்து அவரது நண்பர்கள் பலரும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தனர்.

அப்படியாக தியாகுவும் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். விஜயகாந்த் உடல் நலமில்லாமல் போன பிறகு அவரை மற்றவர்கள் சந்திக்க கூடாது என்று கூறிவிட்டனர் விஜயகாந்த் வீட்டை சேர்ந்தவர்கள். இருந்தாலும் நடிகர் தியாகுவிற்கு மட்டும் விஜயகாந்த்தை சந்திப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

மாதத்திற்கு இருமுறை தியாகு  விஜயகாந்தை சந்தித்தார் அப்பொழுது தியாகு ஏதாவது காமெடி கூறினால் அதற்கு விஜயகாந்த் சிரிப்பாராம். இந்த விஷயத்தை பகிர்ந்த தியாகு கூறும் பொழுது ஒரு வேலை விஜயகாந்தின் நண்பர்களை எல்லாம் விஜயகாந்தை பார்ப்பதற்கு அனுமதித்திருந்தால் அவர் குணமாகி இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார் தியாகு. அவர்கள் வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஆனால் எனக்கு இப்படி தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

To Top