Connect with us

நான் சொல்ற பேரைதான் படத்துக்கு வைக்கணும்.. இயக்குனருடன் சண்டை போட்ட விஜய் ஆண்டனி!..

vijay antony

Cinema History

நான் சொல்ற பேரைதான் படத்துக்கு வைக்கணும்.. இயக்குனருடன் சண்டை போட்ட விஜய் ஆண்டனி!..

Social Media Bar

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். சுக்கரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டணி.

தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வர துவங்கின. அவரது இரண்டாம் படமான டிஸ்யூம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற துவங்கினார் விஜய் ஆண்டனி.

ஆனால் என்னதான் பெரும் இசையமைப்பாளராக இருந்தாலும் கதாநாயகர்களின் ஊழியத்தோடு ஒப்பிடும்போது இசையமைப்பாளர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. எனவே கதாநாயகன் ஆவதன் மூலம் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாமே? என கதாநாயகன் ஆனார் விஜய் ஆண்டனி.

கதாநாயகனாக இவர் நடித்த முதல் படம் நான். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார் விஜய் ஆண்டனி. அதில் முக்கியமான திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கினார்.

சசி ஒரு பேட்டியில் கூறும்போது பிச்சைக்காரன் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை பகிர்ந்திருந்தார். அந்த படத்திற்கு பிச்சைக்காரன் என்று பெயர் வைக்க சசிக்கு விருப்பமே இருக்கவில்லை. விஜய் ஆண்டனிதான் இந்த படத்தை தயாரித்தார். அவர் சசியிடம் கேட்காமலே பிச்சைக்காரன் என்கிற பெயரை பதிவு செய்துவிட்டு சசியிடம் வந்து சார் பிச்சைக்காரன்னு பேர் வச்சிருக்கேன். ஓ.கே வா என கேட்டுள்ளார்.

சரி படப்பிடிப்பு முடிவதற்குள் விஜய் ஆண்டனி மனதை மாற்றிவிடலாம் என அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார் சசி. ஆனால் நாட்கள் செல்ல செல்ல தீவிரமாக படத்திற்கு பிச்சைக்காரன் எனதான் பெயர் இருக்க வேண்டும் என்று இருந்துள்ளார் விஜய் ஆண்டனி. அதனால் படத்தின் பெயரும் பிச்சைக்காரன் என்றே ஆனது என தனது பேட்டியில் சசி கூறியுள்ளார்

To Top