News
தளபதி விஜய் மொக்க… அட்லி open talk! இருந்தாலும் இப்படி பேசியிருக்கக் கூடாது!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லி, நடிகர் விஜய்யை வைத்து தான் எடுத்த ரிஸ்க் பற்றியும் அது தெரியாமல் தன்னை இப்படி பேசிவருவதாகவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
நடிகராக இருந்து தற்போது ஒரு அரசியல் கட்சி தலைவராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இதனால் இனிமேல் நடிப்புலாம் இல்லை முழு நேரமும் அரசியல் களத்தில் குதிப்பதாகவும் அறிவித்திருந்தார். அதனால் அவரது சினிமா வாழ்க்கை கடைசியாக தளபதி 69, அதாவது GOAT படத்தின் மூலம் நிறைவடைய போகிறது.
தளபதி 69 திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி தான் தற்போது அனைவராலும் கேட்கப்பட்டு வருகின்றது. வெற்றிமாறன் முதல் ஆர்.ஜே.பாலாஜி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயக்குனரின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்சமயம் அட்லி தான் தளபதி 69 திரைப்படத்தின் இயக்குனர் என கிட்டத்தட்ட உறுதியானதாக சொல்லப்படுகின்றது.

விஜய்யை வைத்து அட்லி இயக்கிய தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் விஜய்யை வைத்து தான் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் பற்றி பேசியிருக்கிறார் அட்லி. ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ஒரு காதல் படத்தை இயக்கி என்னால் வெற்றிபெற்றிருக்க முடியும். ஆனால் ராஜா ராணி படத்திற்கு பிறகு ஒரு போலீஸ் ஸ்டோரியை எடுத்தேன். அதில் மாஸ் ஹீரோ விஜய்யை ஆறு வயது குழந்தையின் அப்பாவாக நடிக்க வைத்தேன்.அந்த குழந்தை முதல் காட்சியிலேயே விஜய்யை மொக்க பேபி என சொல்ல வைத்தேன்.
இதெல்லாம் விஜய் காக தான் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் எனவும் இப்படி தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு ரிஸ்க் எடுத்துள்ளதாகவும் ஆனால், ஒரு சிலர் ரிஸ்க் இல்லாமல் நான் படமெடுப்பதாக சொல்கின்றனர் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார் அட்லி.
