Cinema History
சல்லியா சல்லியா நொறுக்கிட்டியேப்பா.. இசையமைப்பாளாருக்கு சம்பவம் செய்த விஜய்!.
தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ.
இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கான பூஜை கூட ஏற்கனவே முடிந்துள்ளது.
இந்த நிலையில் அவரது திரைப்படத்தில் வேலை பார்த்தப்போது இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவாவிற்கு சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாண்புமிகு மாணவன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவாதான் இசையமைத்தார்.
அப்போது வேடிக்கை பார்ப்பதற்காக அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா வருவாராம். அப்போது ஒருமுறை ஸ்ரீ காந்த் தேவாவின் பைக்கை பார்த்த விஜய்க்கு அது மிகவும் பிடித்துப்போகவே அந்த பைக்கை சில நாட்களுக்கு கொடுங்கள் என வாங்கியுள்ளார் விஜய்.
அப்போதே ஸ்ரீகாந்த் தேவா “சார் இது எனக்கு பிடித்த வண்டி. இதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார். உடனே விஜய்யும் பத்திரமாக பார்த்துக்கொள்வதாக கூறி எடுத்து சென்றுள்ளார். ஆனால் வெகுநாட்களாக விஜயையும் காணவில்லை, பைக்கையும் காணவில்லை.
பிறகு மாண்புமிகு மாணவன் படம் வெளியானது. அதில் முதல் காட்சியிலேயே ஸ்ரீகாந்த் தேவா பைக்கை கொண்டுவந்து சேதம் செய்திருந்தார் விஜய். அந்த விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.
