Connect with us

இந்த படம் எனக்கு ஒத்து வராது.. விஜய் விட்டு சென்று சூரியாவிற்கு கடைசியில் அதிரி புதிரி ஹிட் கொடுத்த படம்!..

surya vijay

News

இந்த படம் எனக்கு ஒத்து வராது.. விஜய் விட்டு சென்று சூரியாவிற்கு கடைசியில் அதிரி புதிரி ஹிட் கொடுத்த படம்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்களை நம்மால் இன்றவும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த படத்தின் தாக்கம் நம் மனதை விட்டு நீங்காமல் இருக்கும்.

அதிலும் நமக்கு பிடித்த நடிகர்கள் நடித்து அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்துவிட்டால், அந்த படத்தை தொலைக்காட்சியில் எத்தனை முறை ஒளிப்பரப்பு செய்தாலும் சலித்துக் கொள்ளாமல் நாம் பார்ப்போம்.

அந்த வகையில் உன்னை நினைத்து கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்து அதன் பிறகு சூர்யா நடித்து வெற்றி பெற்றது. தற்பொழுது இந்த படத்தைக் குறித்த அந்த நடிகர் பற்றிய தகவலை இயக்குனர் விக்ரமன் தெரிவித்திருக்கிறார். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

இயக்குனர் விக்ரமன்

இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவருடைய படங்கள் அனைத்தும் தனித்துவம் கொண்டதாக இருக்கும். மேலும் குடும்பங்களுடன் அமர்ந்து பார்க்கும் படமாக இவர் எடுப்பார். இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் பெண்களின் மீதான சமூக அக்கறை எப்பொழுதுமே இருக்கும்.

இவர் முதன்முதலில் புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானார்.

மேலும் இவர் பல வகையான வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதில் அவர் இயக்கிய படமான சூரிய வம்சம், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்.

உன்னை நினைத்து படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகர்

உன்னை நினைத்து படத்தில் சூர்யா, சினேகா, லைலா, ரமேஷ் கண்ணா, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளிவந்து சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தில் முதலாவதாக நடிக்க இருந்த நடிகர் விஜய். இவர் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பிறகு இந்த படத்தின் கிளைமாக்ஸில் தனக்கு உடன்பாடு இல்லை என கூறிவிட்டார்.

unnai ninaithu

இதுகுறித்து இயக்குனர் விக்ரமன் கூறுகையில் ஆரம்பத்தில் இருந்து இந்த படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் விஜய்க்கு உடன்பாடு இல்லை. நான் தான் அவரை சம்மதிக்க வைத்து இந்த படத்தில் நடிக்க வைத்தேன். மேலும் இந்த படத்தின் ஒரு பாடலின் சூட் முடிந்த நிலையில், என்னை விஜய் அழைத்து இந்த படத்தின் கிளைமாக்ஸில் எனக்கு உடன்பாடு இல்லாததால் நான் படத்தில் இருந்து விலகுகிறேன் என கூறிவிட்டார். அதன் பிறகு தான் சூர்யா இந்த படத்திற்கு ஒப்பந்தமாகி நடித்தார் என அவர் தெரிவித்திருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top