Connect with us

பரீச்சைக்கு கூட அப்படி மனப்பாடம் பண்ணுனது இல்ல!.. பட வசனத்தை இரண்டு நாளாக மனப்பாடம் செய்த விஜய்!..

vijay2

Cinema History

பரீச்சைக்கு கூட அப்படி மனப்பாடம் பண்ணுனது இல்ல!.. பட வசனத்தை இரண்டு நாளாக மனப்பாடம் செய்த விஜய்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே பல வேடங்களில் நடித்து வந்து பிறகு கதாநாயகன் ஆனவர் நடிகர் விஜய். திரை உலகிற்கு வந்த காலம் முதலே கடுமையாக உழைத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் விஜய்.

விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கேளிக்கு உள்ளாக்கப்பட்டார். அவரைப் பார்த்த பலரும் அவரை உருவ கேலி செய்தனர். ஆனால் அதை எதையுமே கண்டு கொள்ளாது அப்போதைய இளம் வயதிலும் கூட தொடர்ந்து சினிமாவில் முயற்சித்து போராடி வந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பூவே உனக்காக, பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகுதான் காதல் தொடர்பான திரைப்படங்கள் விஜய்க்கு வர துவங்கின. காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், நினைத்தேன் வந்தாய் போன்ற திரைப்படங்கள் எல்லாம் அவரது மார்க்கெட்டை இன்னும் அதிகப்படுத்தியது.

பிறகு திருமலை திரைப்படம் மூலமாக ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக மீண்டும் சினிமாவிற்குள் களம் இறங்கினார் விஜய். அப்போது துவங்கி இப்போது வரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே வளம் வந்து கொண்டுள்ளார் விஜய்.

விஜய்யை ஒரு டெடிகேஷன் ஆன நடிகர் என்று கூறலாம் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுதும் முழு ஈடுபட்டோடு அந்த படத்தில் நடிக்க கூடியவர். இப்படி நண்பன் படத்தில் நடந்த ஒரு நிகழ்வை விஜய் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நண்பன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு புத்தகத்தின் பெயரை கூறுவதற்கு பெரிய விரிவான வசனம் ஒன்றை கூறுவார். அதை ஒரே டேக்கில் செய்து முடித்தார் விஜய். இது குறித்து அவர் அந்த பேட்டியில் கூறும் பொழுது இரண்டு நாட்கள் முன்பே அந்த வசனம் வரும் என்று எனக்கு தெரியும்.

எனவே நான் வசனத்தை வீட்டுக்கு கொண்டு சென்று இரண்டு நாட்கள் உட்கார்ந்து மனப்பாடம் செய்தேன். என்று கூறியிருக்கிறார் அப்பொழுது அவரிடம் பேசிய தொகுப்பாளர் பள்ளி படிக்கும் காலங்களில் இப்படி ஏதாவது விஷயங்களை மனப்பாடம் செய்திருக்கிறீர்களா என்று கேட்ட பொழுது விஜய் அதற்கு இல்லை பள்ளி காலங்களில் கூட அப்படி எதுவும் நான் மனப்பாடம் செய்ததில்லை என்று கூறியுள்ளார்.

To Top