Connect with us

விஜய்யை முதலமைச்சரா வச்சி அப்பவே வந்த படம்!.. ஆனால் பாதில பிரச்சனையாயிட்டு.. எந்த படம் தெரியுமா?

vijay in chief minister

Cinema History

விஜய்யை முதலமைச்சரா வச்சி அப்பவே வந்த படம்!.. ஆனால் பாதில பிரச்சனையாயிட்டு.. எந்த படம் தெரியுமா?

Social Media Bar

Vijay Movie: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரது இறுதி படம் குறித்துதான் பேச்சுக்கள் வெகுவாக இருந்து வருகிறது. தற்சமயம் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ராணுவம் தொடர்பான வேலையில் இருக்கும் நபராக இவர் இருக்கலாம். என்று கருத்துக்கள் இருக்கின்றன.

அந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் மட்டுமே விஜய் இரட்டை வேடத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் கோட். இதற்குப் பிறகு  விஜய் எந்த திரைப்படத்தில் நடிக்க போகிறாரோ அதுதான் அவரது இறுதி திரைப்படம் என்று கூறப்படுகிறது.

vijay
vijay

அதற்கு பிறகு முழுமையாக அரசியலுக்கு செல்ல இருக்கிறார் விஜய். எனவே இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு மட்டும் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் என்று ஒரு பெரும் இயக்குனர் பட்டாளமே காத்திருக்கிறது. அவர்களில் யாருக்கு விஜய் ஓ.கே சொன்னாலும் அவர்கள் விஜய்யை வைத்து படம் இயக்க தயாராக இருக்கிறார்கள்.

விஜய் முதலமைச்சராக நடித்த படம்:

ஆனால் இந்த திரைப்படத்தில் விஜய் ஒரு முதலமைச்சர் ஆக இருக்க வேண்டும் என்பது விஜய்யின் முக்கிய கண்டிஷனாக இருக்கிறது. இந்த நிலையில் இதை கேள்விப்பட்ட  இயக்குனர் வெங்கடேஷ் தனது பேட்டியில் ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

 தமிழில் சாக்லேட், குத்து, வாத்தியார், மழை மழை, மாஞ்சா வேலு போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் வெங்கடேஷ். ஆனால் பெரிதாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இவர் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படம் பகவதி.

அப்போதே பெரும் வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது பகவதி. இந்த திரைப்படத்தின் கதையை எழுதும் பொழுது அதில் கிளைமாக்ஸில் விஜய் முதலமைச்சராக ஆவதாக தான் கதையை எழுதி இருந்தார் இயக்குனர். இது குறித்த ஒரு பகவதி திரைப்படத்தில் ஒரு காட்சியும் இருந்தது.

விஜய் பெரிய கேங்ஸ்டராக மாறிய பிறகு முதலமைச்சர் அவரை அழைத்து அவருக்கு தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்புகளை கொடுப்பார். முதலில் எழுதிய கதைப்படி அதற்கு விஜய் ஒப்புக்கொண்டு தேர்தலில் நின்று படிப்படியாக பெரும் உயரத்தை தொட்டு முதலமைச்சர் ஆவார் என்று இருக்கும். ஆனால் அதன் பிறகு அது தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று பாதிக்குப் பிறகு கதையை மாற்றி விட்டோம் என்று கூறியிருக்கிறார் வெங்கடேஷ்.

 இல்லையென்றால் அப்பொழுதே விஜய் முதலமைச்சராக நடித்து ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கும்.

To Top