Tamil Cinema News
ரொமான்ஸ்ல திரிஷாவை மிஞ்ச முடியாது.. என்னோட கனவு கன்னி… ஓப்பன் டாக் கொடுத்த விஜய் சேதுபதி.!
சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி. வில்லன், காமெடி, ஹீரோயிசம் என அனைத்தையும் சிறப்பாக செய்ய கூடியவர் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்களை போல தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்கிறேன் என்று இல்லாமல் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுப்பவர் விஜய் சேதுபதி.
முக்கியமாக நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரமாக இருந்தால் உடனே அதை தேர்ந்தெடுத்து நடித்து விடுவார். அந்த அளவிற்கு நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் உண்டு. எந்த ஆக்ஷன் காட்சிகளும் இல்லாமல் காதல் கதையை மட்டும் கொண்டு விஜய் சேதுபதி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் 96.
இந்த திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்கு திரை துறையிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி அதிகமாக இந்த படம் குறித்து பேசப்பட்டது. இந்த நிலையில் அந்த சமயத்தில் த்ரிஷா குறித்து விஜய் சேதுபதி பேசிய விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதில் பேசிய விஜய் சேதுபதியிடம் நிரூபர்கள் கேட்கும்போது உங்கள் இருவரில் யார் மிகவும் ரொமான்ஸான ஆள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி த்ரிஷாதான் என்னை விட சீனியர். பல இளைஞர்களுக்கு ஏன் அவர் கனவு கன்னியாக இருக்கிறார் என்றால் அவரது முக பாவனைகள்தான் அதற்கு காரணம்.
அந்த முகபாவனையால் எனக்கும் அவர்தான் கனவு கன்னி எனவே என்னை விட அவர்தான் ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடிக்க கூடியவர் என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
