நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் கடைசி படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்பதை விஜய் மீண்டும் மீண்டும் அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிங்கப்பூரில் கோலாகலமாக நடந்தது. இது விஜய்யின் வாழ்க்கையில் இறுதி இசை வெளியீட்டு விழா என்பதால் மற்ற விழாக்களை விடவும் கொஞ்சம் அதிக பட்ஜெட்டில்தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அரசியல் சார்ந்து எதுவும் பேசக்கூடாது என விஜய்க்கு விதிமுறையிடப்பட்டிருந்தது. அதே போல கட்சி கொடிகள் போன்றவற்றை யாரும் பயன்படுத்தக்கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்கள் பலரும் எதிர்பார்ததற்கு ஏற்ப 20 நிமிடங்கள் விஜய் தனது பேச்சை நடத்தினார்.
இந்த நிலையில் விஜய் மேடையில் பேசும்போது போறவங்க வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது என பேசியிருந்தார். தற்சமயம் ஜனநாயகன் திரைப்படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படம் வெளியாக இருக்கிறது.
எனவே விஜய் அதை குறிப்பிட்டுதான் பேசியிருப்பார் என ஒரு பக்கம் கருத்து இருக்கிறது. ஆனால் விஜய் தனது அரசியல் எதிரிகளை குறிப்பிட்டுதான் அப்படி பேசியிருப்பார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.







